அச்சு முறுக்கு (Achu muruku recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

அச்சு முறுக்கு (Achu muruku recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 3/4 கப் அரிசி மாவு
  2. 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  3. 1 முட்டை
  4. 1/2 கப் தேங்காய் பால்
  5. 1 ஸ்பூன் கருப்பு எள்ளு
  6. 6 ஏலக்காய்
  7. 2 சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    முட்டையை நன்கு அடித்து கலந்து கொள்ளவும் அரிசி மாவுடன் உப்பு மற்றும் வறுத்த எள்ளு மற்றும் சர்க்கரை ஐ பொடித்து சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் அடித்த முட்டையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் தேங்காய் உடன் ஏலக்காய் சேர்த்து அரைத்து பால் எடுத்து கொள்ளவும் பின் அந்த தேங்காய் பால் ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  3. 3

    மாவை கட்டியில்லாமல் நன்கு கலந்து தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்

  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி (அச்சு முறுக்கு அச்சை சூடான எண்ணெயில் போட்டு வைக்கவும்) சூடானதும் அச்சை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போடவும் ஒரு நிமிஷம் அப்படியே விடவும்

  5. 5

    அச்சில் இருந்து அழகாக எண்ணெயில் பிரிந்து வரும் (திரும்ப அச்சை எண்ணெயிலே போட்டு வைக்கவும்) திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  6. 6

    ஒவ்வொரு முறையும் மாவை நன்கு கலந்து கொண்டு சூடான அச்சை விட்டு எடுத்து எண்ணெயில் போடவும்

  7. 7

    இரண்டு புறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்

  8. 8

    சுவையான கேரள மாநிலத்தின் ஸ்பெஷல் அச்சு முறுக்கு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes