கோங்குரா தொக்கு (Kongura thokku recipe in tamil)

Prabha muthu
Prabha muthu @cook_597599

#ap கோங்குரா தொக்கு ஆந்திராவில் பிரபலமானது. கோங்குரா என்றால் தமிழில் புளிச்ச கீரை. இந்த புளிச்ச கீரையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக உடல்வெப்பத்தால் அவஸ்தைப்படுபவர்கள், புளிச்ச கீரையை சாப்பிட்டால் தணிந்துவிடும். அதிலும் தொக்கு செய்து சாதத்துடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25நிமிடம்
4பேர்
  1. ஒரு கட்டுபுளிச்ச கீரை
  2. 15வரமிளகாய்
  3. ஒரு ஸ்பூன்மல்லி
  4. ஒரு ஸ்பூன்சீரகம்
  5. கால் ஸ்பூன்வெந்தயம்
  6. பெருங்காயத்தூள் சிறிதளவு
  7. நல்லெண்ணெய் தேவையான அளவு
  8. கடலைப் பருப்பு மற்றும் கடுகு தாளிக்க சிறிதளவு
  9. உப்பு தேவையான அளவு
  10. 100 கிராம்சின்ன வெங்காயம்
  11. 8பூண்டு பல்

சமையல் குறிப்புகள்

25நிமிடம்
  1. 1

    புளிச்ச கீரையை நன்கு சுத்தம் செய்து அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    கடாயில் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி மல்லி சீரகம் வெந்தயம் மற்றும் வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    அதே வாணலியில் மீண்டும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்த கீரையை நன்றாக வதக்க வேண்டும் 10 நிமிடம் மிதமான தீயில் வதங்கியதும் கலர் மாறி கீரை நன்றாக சுருங்கி வெந்துவிடும்

  4. 4

    முன்பு வறுத்து வைத்திருந்த பொருட்களை மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் அதனுடன் வதக்கி வைத்திருக்கும் கீரையையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்

  5. 5

    வானவெளியில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு பெருங்காயத்தூள் தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் பூண்டை நன்றாக தட்டி அதனுடன் சேர்த்து அதையும் வதக்கவும் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் கிளறிவிடவும் தேவையான அளவு உப்பை சேர்த்து கொள்ள வேண்டும்

  6. 6

    பத்து நிமிடம் கீரை நன்றாக வதங்கியதும் ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா தொக்கு தயார் ஒரு பெரிய கட்டு கீரைக்கு பதினைந்திலிருந்து இருபது வரமிளகாய் தேவைப்படும்

  7. 7

    சூடான சாதத்தில் இந்த தொக்கை சேர்த்து நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Prabha muthu
Prabha muthu @cook_597599
அன்று

Similar Recipes