மைசூர் போண்டா (Goli baji)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

#karnataka
#the.chennai.foodie

உடுப்பி ஸ்டைல் மைசூர் போண்டா. எல்லா இடங்களிலும் காணப்படும் டீ டைம் ஸ்னாக்ஸ் ரெசிபி.

மைசூர் போண்டா (Goli baji)

#karnataka
#the.chennai.foodie

உடுப்பி ஸ்டைல் மைசூர் போண்டா. எல்லா இடங்களிலும் காணப்படும் டீ டைம் ஸ்னாக்ஸ் ரெசிபி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. மைதா மாவு-2 கப்
  2. பச்சை மிளகாய்-2
  3. இஞ்சி-1 டீஸ்பூன்
  4. தயிர்-1/4 கப்
  5. கறிவேப்பிலை கொத்தமல்லி இலை சிறிது
  6. தேங்காய் துண்டுகள்-1/4 கப்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். மைதா மாவை சலித்து விட்டு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி,கறிவேப்பிலை, தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை நன்றாக கையினால் 10-15: நிமிடங்கள் பீட் செய்வது போல் நன்றாக பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    2-2:30 மணி நேரம் வரை ஊறவைத்து கொள்ளவும். சிறிது கொத்தமல்லி இலை, தேங்காய் துண்டுகள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.. பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மாவை சிறிது சிறிதாக போண்டா போன்று போடவும்.

  3. 3

    இரு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.. இப்போது சூடான சுவையான மைசூர் போண்டா ரெடி.. தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.

  4. 4

    மாவு கலவையை நன்றாக பிசைந்து 2 மணி நேரம் ஊற வைப்பதால் போண்டா மிருதுவாக மற்றும் உப்பலாக வரும்.. டீ டைம்க்கு ஏற்ற ஸ்னாக்ஸ்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes