சிக்கன் சேமியா பிரியாணி #the.chennai.foodie

kamalavani r
kamalavani r @cook_26397458

என் முஸ்லிம் தோழி வீட்டுக்கு சென்ற போது சாப்பிட்டேன் பிடித்திருந்தது எங்கள் வீட்டில் செய்து பார்த்தேன் என் மகன் மகள் இருவரும் ரொம்ப விரும்பி சாப்பிட்டார்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பேர்
  1. சேமியா 450 கிராம்
  2. 900 மில்லி தண்ணீர்
  3. சிக்கன் 200 கிராம்
  4. மஞ்சள் தூள்
  5. உப்பு
  6. புதினா
  7. கொத்தமல்லி
  8. பச்சை மிளகாய்
  9. சோம்பு
  10. வெங்காயம் மீடியம் சைஸ் இரண்டு
  11. தக்காளி பெரியது ஒன்று
  12. கரம் மசாலா 1 டீ ஸ்பூன்
  13. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    சிக்கன் துண்டுகளை சுத்தமாக கழுவி குக்கரில் போட்டு சிக்கனுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து மஞ்சள் தூள் 1/2 டீ ஸ்பூன் சேர்த்து தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வைத்து வேக வைக்க வேண்டும்

  2. 2

    புதினா கொத்தமல்லி பச்சை மிளகாய் 10 சோம்பு 1/2 டீ ஸ்பூன் சேர்த்து நைசாக அரைக்கவும்

  3. 3

    வெங்காயம் தக்காளி இரண்டையும் நீளமாக கட் பண்ணி கொள்ள வேண்டும்.

  4. 4

    கடாய் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும்.

  5. 5

    அடுத்து தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும்.

  6. 6

    அரைத்து வைத்த மாசாலா சேர்க்கவும்.

  7. 7

    கரம் மசாலா பொடி சேர்த்து கலந்து விடவும்.

  8. 8

    சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்..

  9. 9

    சிக்கனில் உள்ள தண்ணீர் இன்னும் தேவை யான தண்ணீர் 900 மில்லி இருக்கும் அளவிற்கு சேர்க்கவும்.

  10. 10

    சிக்கனில் உப்பு சேர்த்துள்ளோம் அதனால் சேமியாவிற்குதேவையான உப்பு போடவும்.

  11. 11

    தண்ணீர் கொதிக்க விடவும்.

  12. 12

    சேமியா சேர்க்கவும் கலந்து மூடி வைக்கவும் மூன்று நிமடத்தில் வெந்து விடும்.

  13. 13

    சிக்கன் சேமியா பிரியாணி தயார். #Myfirstrecipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

kamalavani r
kamalavani r @cook_26397458
அன்று

Similar Recipes