பாலாடையில் இருந்து வெண்ணெய் நெய் தயாரிப்பு முறை

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

#cookwithmilk

வீட்டிலேயே சுத்தமான முறையில் வெண்ணெய் நெய் தயாரிக்கலாம். மணல் மணலாய் மணக்கும் நெய் தயாரிக்கும் முறை.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
  1. பாலாடை- 3கப் (15 நாட்கள் எடுத்துக் கொள்ளவும்)
  2. ஐஸ் கட்டிகள்- தேவையான அளவு
  3. ஐஸ் தண்ணீர்- தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒவ்வொரு முறை பால் காய்ச்சும் போது சேரும் பாலாடையை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து பிரிட்ஜில் வைக்கவும்.15-20 நாட்களுக்கு ஒரு முறை வெண்ணெய் நெய் தயாரிக்கலாம்.3-4 நாட்களுக்கு ஒரு முறை 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து வைக்கவும்.இப்படி செய்வதால் பாலாடை கெட்டு விடாமல் தடுக்கலாம்.எடுத்து வைத்துள்ள பாலாடையை சிறிது எடுத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிது ஐஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக விட்டு விட்டு அரைக்கவும்.ஐஸ் தண்ணீர் சேர்ப்பதால் சீக்கிரம் வெண்ணெய் திரண்டு வரும். கையில் மிக்ஸியில் ஒட்டாமல் வரும்.

  2. 2

    முதலில் அரைக்கும் போது கீரீம் போல் வரும்.. அதில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைக்கும் போது வெண்ணெய் வரும். நன்றாக திக்கான பதத்திற்கு வந்ததும் கையில் எடுத்து நன்றாக உருண்டைகளாக உருட்டவும். இப்படி செய்தால் அதிகப்படியான தண்ணீர் வடிந்து விடும்.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து வைக்கவும்.இந்த பாத்திரத்தில் தட்டிய வெண்ணெயை வைக்கவும்.இதே போல் மீதமுள்ள பாலாடையையும் மிக்ஸியில் அரைத்து வெண்ணெய் ஆக செய்து வைக்கவும். 2-3 முறை தண்ணீர் சேர்த்து மிருதுவாக அலசி விடவும். வெண்ணெய் ரெடி

  3. 3

    ஒரு கடாயில் செய்து வைத்த வெண்ணெய்களை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து காய்ச்சவும்.வெண்ணெய் உருகி மஞ்சள் நிறத்தில் வரும்.மீண்டும் காய்ந்ததும் சிறிது பால் திரிந்து விடுவது போல வரும்.இடையிடையே நன்றாக கலந்து கொள்ளவும். நெய் மணம் வந்து நல்லெண்ணெய் போல நிறத்தில் மாறும் வரை நன்கு காய்ச்சவும்.

  4. 4

    நெய் பொங்கி வரும் வரை காய்ந்ததும் அதில் சிறிது முருங்கை இலை அல்லது கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இதனால் நெய் மணம் மற்றும் நெய் பொங்குதல் நின்று விடும். இப்போது சூடான மணக்கும் நெய் ரெடி.நன்கு ஆறியதும் ஒரு பாத்திரத்தில் வடிகட்டி ஊற்றி வைக்கவும்.1-2 நாட்களில் மஞ்சள் நிறத்தில் மணல் மணலாய் நெய் வந்து விடும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes