அக்காரவடிசல்  (Akkaraavadisal recipe in Tamil)

Senthamarai Balasubramaniam
Senthamarai Balasubramaniam @cook_24912331

#cookwithmilk

*பாலில் அரிசியும் பருப்பும் குழைய வேக வைத்து வெல்லம் நெய் சேர்த்து செய்யும் ஒரு இனிப்பு வகையாகும். ஸ்ரீரங்கம் பெருமாளுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கும் மிகவும் விசேஷமாக செய்து படைக்கும் ஒரு நைவேத்தியமாகும். புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு செய்து படைத்து அவருடைய அருளை பெறுவோமாக.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்கள்
  1. 200 கிராம் பச்சரிசி
  2. 25 கிராம் பாசிப்பருப்பு
  3. 600 மில்லி பால்
  4. 500 கிராம் வெல்லம்
  5. 100 கிராம் நெய்
  6. முந்திரி திராட்சை தேவைக்கு ஏற்ப
  7. மூன்று ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அரிசி பருப்பையும் சேர்த்து லேசாக வறுக்கவும். குக்கரில் 600 மில்லி பாலை ஊற்றி அரிசி பருப்பைக் களைந்து குக்கரில் போட்டு ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து குழைய வேகவிடவும்.

  2. 2

    வெல்லத்தை தட்டிப் போட்டு 200ml தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ஸ்டீம் அடங்கியதும் குக்கரைத் திறந்து கரண்டியால் நன்றாக மசித்து விட்டு பிறகு அடுப்பை சிம்மில் வைத்து வெல்லக் கரைசலை ஊற்றி அத்துடன் நெய்யையும் ஊற்றி சிறிது நேரம் கிளறிவிடவும்

  3. 3

    இதனுடன் முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து மற்றும் ஏலக்காயை தூள் சேர்த்து கிளறிவிட்டால் கமகமக்கும் வாசனையுடன் சூடான அக்காரவடிசல் தயார். அதிக இனிப்பு சுவையுடன் இருப்பது இதனுடைய சிறப்பு ஆகும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Senthamarai Balasubramaniam
அன்று

Similar Recipes