உருளைக்கிழங்கு தோசை

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#GA4 #week3 #Dosa
உருளைக்கிழங்கை வைத்து ஒரு சுவையான மொறுமொறு தோசை,அதுவும் உடனடியாக செய்து சாப்பிடலாம். அதிலும் குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடித்த உருளைக்கிழங்கில் இப்படி தோசையாக செய்து கொடுத்தால் கேட்டு கேட்டு சாப்பிடுவங்க. இதற்கு தேங்காய் சட்னி உடன் சாப்பிட்டால், அதன் சுவையே இன்னும் தனி.வாங்க வேண்டியஉருளைகிழங்கு தோசை எப்படி செய்வது என்று இங்கு பார்ப்போம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 நபர்
  1. தோசை மாவு 2 கரண்டி
  2. 4உருளைக்கிழங்கு
  3. வெங்காயம் 1
  4. மிளகாய் தூள் 1/2ஸ்பூன்
  5. கரம் மசாலா 1/2ஸ்பூன்
  6. மஞ்சள் சிறிதளவு
  7. மிளகு பொடி 1/2ஸ்பூன்
  8. உப்பு சிறிதளவு
  9. சீரகம் 1/2ஸ்பூன்
  10. சோள மாவு ஒரு ஸ்பூன்
  11. பெருங்காய தூள் ஒரு சிட்டிகை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை எடுத்து தோல் சீவி துருவி வைத்து கொள்ள வேண்டும்(சிறிய அளவில்). அதேபோல் வெங்காயத்தையும் துருவி வைத்து கொள்ள வேண்டும்

  2. 2

    பிறகு அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு,பெருங்காய தூள், மிளகு தூள், சீரகம், சோள மாவு சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ள வேண்டும்

  3. 3

    பிறகு அதனுடன் தோசை மாவை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.கலந்த பின்னர் 5 நிமிடங்கள் அதை ஊற வைத்து கொள்ள வேண்டும்.

  4. 4

    பின்னர் தோசைகல் சூடு ஆனதும் அதில் உருளைக்கிழங்கு கலவையை தோசைகல்லில் ஊற்றி, வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்

  5. 5

    ரொம்பவும் சுலபமான முறையில் உடனடி உருளைக்கிழங்கு தோசை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
தயா ரெசிப்பீஸ்
அன்று
Coimbatore

Similar Recipes