மக்ரோனி சங்கு தேங்காய் பாயாசம்(Macaroni Coconut Payasam recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

மக்ரோனி சங்கு தேங்காய் பாயாசம்(Macaroni Coconut Payasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40mins
4 பரிமாறுவது
  1. 1கப் சங்கு மக்ரோனி
  2. 1கப் பால்
  3. 1சிட்டிகை சோடா உப்பு
  4. 2பின்ச் குங்குமப்பூ
  5. 1கப் சர்க்கரை
  6. அரைக்க:
  7. 1கப் தேங்காய் துருவல்
  8. 10உடைத்த முந்திரி
  9. 3ஏலக்காய்
  10. தாளிக்க:
  11. 2டேபிள் ஸ்பூன் நெய்
  12. 10உடைத்த முந்திரி
  13. 5உடைத்த பாதாம் பருப்பு

சமையல் குறிப்புகள்

40mins
  1. 1

    சங்கு மக்ரோனி 1 கப் எடுத்து கழுவி கொதிக்கும் தண்ணீரில் போட்டு நன்கு வேக விடவும்.வெந்தவுடன் தண்ணீரை வடித்து விடவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில் 1 கப் தேங்காய் துருவல், 3 ஏலக்காய், 10 உடைத்த முந்திரியை சேர்த்து நன்கு அரைத்து விடவும்.அரைத்த விழுதை வெந்த மக்ரோனியில் சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும்.1 சிட்டிகை சோடா உப்பு சேர்க்கவும்.

  3. 3

    அடுப்பை சிம்மில் வைத்து தேங்காய் பச்சை வாசனை போக வேக விட்டு, 1 கப் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு 10 உடைத்த முந்திரி, 5 பாதாம் பருப்பு நறுக்கியது சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

  4. 4

    பொன்னிறமாக வறுத்ததை பாயசத்தில் சேர்த்து கலந்து விடவும்.2 பின்ச் குங்குமப்பூ சேர்க்கவும்.

  5. 5

    காய்ச்சி குளிர்வித்த 1 கப் பாலை சேர்த்து கலந்து விடவும்.அடுப்பில் வைத்து 1 நிமிடம் கலக்கி விட்டு இறக்கி விடவும்.

  6. 6

    சுவையான மக்ரோனி சங்கு தேங்காய் பாயாசம் ரெடி.😄😄நாம் எப்பொழுதும் பருப்பு பாயாசம், சேமியா பாயசம் செய்வோம். மக்ரோனி சங்கு தேங்காய் பாயாசம் சற்று வித்தியாசமாக சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes