உடைத்து விட்ட முட்டை கிரேவி (Udaithu vitta muttai gravy recipe in tamil)

Jeyaveni Chinniah
Jeyaveni Chinniah @cook_13448767
Karnataka

#GA4
#week4
சாதம், ஆப்பம், இடியப்பம் உடன் சாப்பிட ருசியான கிரேவி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2முட்டை
  2. 1தக்காளி நீளமாக வெட்டியது
  3. 1வெங்காயம் - நீளமாக வெட்டியது
  4. 1 கப்தேங்காய் துருவல்
  5. 1பச்சை மிளகாய் - நீளமாக கீறியது
  6. 1 ஸ்பூன்பெருஞ்சீரகம்
  7. 2ஏலக்காய்
  8. 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  9. 1 சிட்டிகைமஞ்சள் தூள்
  10. 1உருளைக்கிழங்கு
  11. கறிவேப்பிலை சிறிதளவு
  12. 2கிராம்பு
  13. பட்டை சிறுதுண்டு
  14. 4முந்திரி பருப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    உருளைக்கிழங்கை வேகவைத்து சிறுதுண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    தேங்காய், முந்திரி பருப்பு, பெருஞ்சீரகம், 1 ஏலக்காய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்

  4. 4

    நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  5. 5

    கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்

  6. 6

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்

  7. 7

    தக்காளி வதங்கியதும் உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

  8. 8

    அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  9. 9

    பச்சை வாசனை போனதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்

  10. 10

    கொதி வந்ததும் அனைத்து காய்கறிகளையும் தனியாக எடுத்து வைக்கவும். தீயை குறைத்து கொள்ளவும்

  11. 11

    ஒரு குழி கரண்டியில் முட்டையை உடைத்து ஊற்றி அதனை குழம்பில் மெதுவாக ஊற்றவும்

  12. 12

    அதனை மூடி 10 நிமிடம் வைக்கவும்

  13. 13

    பின்னர் காய்கறிகளையும் சேர்த்து சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jeyaveni Chinniah
Jeyaveni Chinniah @cook_13448767
அன்று
Karnataka

Similar Recipes