தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பேருக்கு
  1. பெரியவெங்கெயம் 4
  2. பூண்டு 15
  3. வர மிளகாய் 3
  4. புலி சிறிதளவு
  5. உப்பு
  6. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  7. சீரகம் 1 ஸ்பூன்
  8. சோம்பு 1 ஸ்பூன்
  9. வர மல்லி 1 ஸ்பூன்
  10. வெந்தயம் கால் ஸ்பூன்
  11. பெருங்காயம் தூள்
  12. நல்லெண்ணெய்
  13. கடுகு
  14. உளுந்து

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    கார சட்னி பண்ணுவதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பூண்டு

  2. 2

    பெரிய வெங்காயம், சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் கலர் மாறியவுடன் வர மிளகாய் புலி சேர்த்து வதக்கவும் பின் அதில் சோம்பு,சீரகம்,வர மல்லி,வெந்தயம் சேர்த்து 5 நிமிடம் வரை வதக்கவும்

  3. 3

    பின் அடுப்பை அணைத்து விட்டு ஆரிய பின் அதை மிக்ஸி இல் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  4. 4

    கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுந்து பெருங்காயம் தூள் சேர்த்து கொள்ளவும்,அடுத்து மிளகாய் தூள் 1 ஸ்பூன் சேர்த்து அரைத்து வைத்துள்ளது சேர்த்து 15 நிமிடம் வரை எண்ணெயில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

  5. 5

    அதன் நிறம் மாற தொடங்கும். எண்ணெய் பிரிந்து வந்து சட்னி நன்கு மரி விடும்.சுவையான கார சட்னி தயார்.இதை இட்லி தோசை உடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.கர சட்னி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

kamala nadimuthu
kamala nadimuthu @cook_26564407
அன்று

Similar Recipes