கேழ்வரகு வெங்காயத்தாள் பக்கோடா

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

#millet
நார்ச்சத்து நிறைந்த இந்த மொறுமொறுப்பான கேழ்வரகு வெங்காயத்தாள் பக்கோடா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
4 பேர்
  1. கேழ்வரகு மாவு - 2 கப்
  2. வெங்காயத்தாள் - 1 சிறிய கட்டு
  3. மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
  4. நடுத்தர அளவு வெங்காயம்-2
  5. பச்சை மிளகாய்-2
  6. முந்திரி - 8
  7. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி - தலா ஒரு ஆர்க்கு
  8. சமையல் எண்ணை - பொரிக்க தேவையான அளவு
  9. உப்பு - ருசிக்கேற்ப

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    வெங்காயத்தாளை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    வெங்காயத்தை நீளமாகவும் மற்றும் பச்சை மிளகாயை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    அகலமான பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, மிளகாய்த்தூள், நறுக்கிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஒடித்த முந்திரி மற்றும் உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி பிசறிக் கொள்ளவும்.

  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடாக்கி மிதமான தீயில் மாவு கலவையை பரவலாக தூவி முறுகலாக வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes