பாகற்காய் பக்கோடா (Paakarkaai pakoda recipe in tamil)

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

#GA4 week3 #NANDHU

பாகற்காயில் தாது சத்துக்களும் வைட்டமின்களும் அதிகமாக உள்ளன. இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-இன்ஃபெளமேட்ரி. இதன் கசப்பு நிறைய பேருக்கு பிடிக்காது. இருந்தாலும் இந்த பாகற்காய் பக்கோடாவை குழந்தைகளும் விரும்பி உண்ணுவர்.

பாகற்காய் பக்கோடா (Paakarkaai pakoda recipe in tamil)

#GA4 week3 #NANDHU

பாகற்காயில் தாது சத்துக்களும் வைட்டமின்களும் அதிகமாக உள்ளன. இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-இன்ஃபெளமேட்ரி. இதன் கசப்பு நிறைய பேருக்கு பிடிக்காது. இருந்தாலும் இந்த பாகற்காய் பக்கோடாவை குழந்தைகளும் விரும்பி உண்ணுவர்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
4 பேர்
  1. 250 கிராம்பாகற்காய்
  2. 1 டேபிள்ஸ்பூன்அரிசி மாவு
  3. 1 டேபிள்ஸ்பூன்கடலை மாவு
  4. 1 டேபிள்ஸ்பூன்கார்ன் மாவு
  5. 2 டேபிள் ஸ்பூன்தயிர்
  6. அரை டீஸ்பூன்தனி மிளகாய் தூள்
  7. 1 டீஸ்பூன்தனியா தூள்
  8. 1 டீஸ்பூன்கரம் மசாலா
  9. 1 டேபிள்ஸ்பூன்எலுமிச்சை சாறு
  10. பெருங்காயப் பொடி - கால் டீஸ்பூன்
  11. 1ஆர்க்குகறிவேப்பிலை
  12. உப்பு - ருசிக்கேற்ப
  13. சமையல் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    பாகற்காயை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய பாகற்காய் மற்றும் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் (சமையல்எண்ணை தவிர தவிர) சேர்த்து உதிரி உதிரியாக பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம்.

  3. 3

    இந்த கலவையை 10 நிமிடம் ஊறவிடவும். எண்ணையை மிதமான தீயில் காயவைத்து, பாகற்காய் கலவையை பரவலாக எண்ணெயில் தூவவும். நன்கு சிவந்தவுடன் எடுத்து விடவும்.

  4. 4

    அனைத்தையும் பொரித்து எடுத்த உடன், கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து பக்கோடாவுடன் கலக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes