தேங்காய்ப்பால் சப்பாத்தி வைத்து சோயா கறி(Thenkaaipaal chapathi with soya curry recipe in tamil)

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

தேங்காய்ப்பால் உடம்புக்கு மிகவும் நல்லது. இந்த தேங்காய்ப்பால் சப்பாத்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இதை மதிய உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம். தேங்காய்ப்பால் தனியாக சாப்பிட்டோம் என்றால் சிலருக்கு செரிமானம் ஆகாது ஆதலால் நான் சப்பாத்தியாக சாப்பிட்டால் எளிமையாக ஜீரணம் ஆகும் . தேங்காய் பால் உடலுக்கு குளிர்ச்சியை தரும். #coconut

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பேர்
  1. 250 கிராம்கோதுமை மாவு
  2. 1/2 தேங்காய்
  3. 1 ஸ்பூன் சர்க்கரை
  4. 1 டீஸ்பூன் ஏலக்காய் பவுடர்
  5. தேவையானஅளவு உப்பு
  6. தேவையானஅளவு எண்ணெய் அல்லது நெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும் பின்னர் மிக்ஸியில் அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும் பால் திக்காக இருக்க வேண்டும்.

  2. 2

    பின்னர் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளவும் அதில் சர்க்கரை உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    அதை நன்றாக பிசையவும் பின்னர் சிறிது சிறிதாக தேங்காய் பாலை ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    இதை சப்பாத்தி மாவு பக்குவத்தில் பிசையவும். சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். மாவை சப்பாத்தி கட்டையில் தேய்க்கவும்.

  5. 5

    தோசைக்கல் நன்றாக காய்ந்த பின்னர் தேய்த்த மாவை கடாயில் போடவும்.

  6. 6

    இரண்டு ஸ்பூன் எண்ணெய் விடவும். ஒரு பக்கம் வெந்தவுடன் பின்னர் மறு பக்கமும் திருப்பி வேக வைக்க வேண்டும்.

  7. 7

    இதை உடனே பிசைந்து உடனே சாப்பிட்டு விடலாம் ஊற வைக்க தேவையில்லை.

  8. 8

    இப்பொழுது நமது சூடான சுவையான தேங்காய்ப்பால் சப்பாத்தி ரெடி ஆகிவிட்டது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
அன்று
Erode

Similar Recipes