சிம்பிள் ஒயிட் குருமா (Simple white kuruma recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#coconut
எளிதில், விரைவாக செய்ய முடிந்த பட்டாணி குருமா.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பேர்
  1. 1/4கப் பட்டாணி
  2. 1டேபிள்ஸ்பூன் கேரட் துண்டுகள் பொடியாக அரிந்தது
  3. 1டேபிள்ஸ்பூன் பீன்ஸ் பொடியாக அரிந்தது
  4. கொஞ்சம்புதினா தழை
  5. 1/2இன்ச் பட்டை
  6. 2 கிராம்பு
  7. 3 பச்சை மிளகாய்
  8. 1/2பெரிய வெங்காயம்
  9. 1/4கப் துருவிய தேங்காய்
  10. ஒரு ஸ்பூன் கசகசா
  11. அரை ஸ்பூன் வரை கொத்தமல்லித்தூள்
  12. அரை ஸ்பூன் இஞ்சி
  13. 3பூண்டு பல்
  14. 1/2ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    அரை பெரிய வெங்காயத்தை சன்னமாக அரிந்து கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கசகசா, பட்டை, கிராம்பு, அரை ஸ்பூன் கொத்தமல்லி தூள் எல்லாவற்றையும் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பிரஷர் பேனில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும். புதினாவை சேர்த்து வதக்கவும். லேசாக நிறம் மாறாமல் வதக்கிக் கொள்ளவும். பிறகு பட்டாணி கேரட் பீன்ஸ் மூன்றையும் ஒரு நிமிடம் வரை வதக்கிக் கொள்ளவும். கலர் மாறாமல் எல்லாவற்றையும் வதக்கிக் கொள்ளவும். பிறகு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விடவும். அடுப்பை நிறுத்தி விடவும்.

  3. 3

    குக்கரில் ஆவி அடங்கியவுடன் திறந்து அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து ஒரு கொதி விடவும். அவ்வளவுதான் சுவையான சிம்பிளான பட்டாணி குருமா ரெடி. சப்பாத்தி, பூரி, பரோட்டா, நான், இட்லி, தோசை போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes