தேவையான பொருட்கள்

  1. 1கப் கொண்டைக்கடலை
  2. 1/2 டீஸ்பூன் கடுகு
  3. 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  4. 1 காய்ந்த மிளகாய்
  5. சிறிதுகருவேப்பிலை
  6. 1 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய்
  7. 1/2 டீஸ்பூன் மிளகு சாதம் பொடி
  8. 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  9. தேவைக்கேற்ப உப்பு
  10. 1 டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் உப்பு சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து 5 விசில் விட்டு வேக வைத்து எடுத்து வைக்கவும்வைக்கவும்

  2. 2

    இவை அனைத்தையும் சிறிது வறுத்து பொடித்து வைக்கவும். மிளகு சாதம் பொடி என குறிப்பிட்டுள்ள போடி இதுதான்.

  3. 3

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாய் தாளித்து அதில் வேக வைத்த கொண்டைக்கடலை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    சிறிது உப்பு மிளகு சாதம் பொடி மற்றும் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி பின்பு துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி எடுத்தால் சுவையான கொண்டைக்கடலை சுண்டல் ரெடி.

  5. 5

    இஞ்சி தேங்காய் பச்சை மிளகாய் அரைத்ததை சேர்த்து சுண்டல் தாளிப்பதற்கு பதில் இது போன்று தாளித்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes