🌷🌻🌷🌻🌷அம்மனுக்கு உகந்த அரிசி பருப்பு சாதம்🌷🌻🌷🌻🌷 (Arisi paruppu satham recipe in tamil)

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

அம்மனுக்கு உகந்த அரிசி பருப்பு சாதம் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. இது மிகவும் சுவையாக இருக்கும். இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#pooja

🌷🌻🌷🌻🌷அம்மனுக்கு உகந்த அரிசி பருப்பு சாதம்🌷🌻🌷🌻🌷 (Arisi paruppu satham recipe in tamil)

அம்மனுக்கு உகந்த அரிசி பருப்பு சாதம் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. இது மிகவும் சுவையாக இருக்கும். இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#pooja

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4-5 பேர்
  1. 300 கிராம்அரிசி
  2. 75 கிராம்துவரம் பருப்பு
  3. 1 பச்சை மிளகாய்
  4. 4 பல் பூண்டு
  5. 2 வெங்காயம்
  6. 1 தக்காளி
  7. 1 ஸ்பூன் சீரகம
  8. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. 1 ஸ்பூன் மஞ்சள்தூள்
  10. 1 ஸ்பூன் மல்லித்தூள்
  11. உப்பு தேவையான அளவு
  12. தண்ணீர் தேவையான அளவு
  13. கொத்தமல்லி கருவேப்பிலை தேவையான அளவு
  14. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    அரிசி பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    தக்காளி வெங்காயம் பூண்டு மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

  3. 3

    குக்கரில் எண்ணையை ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் சீரகத்தை சேர்க்கவேண்டும். ஜீரகம் சிவந்தவுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள அனைத்தையும் சேர்க்கவேண்டும்.

  4. 4

    தக்காளி வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் நன்றாக வதங்கியவுடன். அரிசியையும் பருப்பையும் சேர்க்கவேண்டும். இரண்டு பங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

  5. 5

    பின்னர் மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும.

  6. 6

    கிளறிய உடன் கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை சேர்க்க வேண்டும்.

  7. 7

    தண்ணீர் கொதித்தவுடன் குக்கரை மூடவேண்டும். இரண்டு விசில் விட்டு இறக்க வேண்டும்.

  8. 8

    இப்போது நமது சூடான சுவையான அம்மனுக்கு உகந்த அரிசி பருப்பு சாதம் ரெடி ஆகிவிட்டது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
அன்று
Erode

Similar Recipes