கம்பு சுண்டல்

Udayabanu Arumugam
Udayabanu Arumugam @cook_26989947

புரதசத்து நிறைந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு சுண்டல் வகை
#houze_cook

கம்பு சுண்டல்

புரதசத்து நிறைந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு சுண்டல் வகை
#houze_cook

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
  1. கம்பு மாவு - 1/2 கப்
  2. துருவிய கேரட் - 1/2 cup
  3. பொடியாக நறுக்கிய மாங்காய் - 3 தேக்கரண்டியளவு
  4. துருவிய தேங்காய் - 3 தேக்கரண்டியளவு
  5. உப்பு - தேவையான அளவு
  6. தாளிக்க
  7. எண்ணெய்
  8. கடுகு
  9. வெள்ளை உளுந்து
  10. கருவேப்பிலை
  11. கடலை பருப்பு
  12. வரமிளகாய்
  13. பெருங்காயப் பொடி

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கம்பு மாவை சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும். 1/2 கப் மாவுக்கு 2 தேக்கரணடியளவு தண்ணீர் போதுமானதாக இருக்கும்

  2. 2

    பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக பிடித்து 15 நிமிடம் இட்லி பாத்திரத்தில் வேக விடவும்

  3. 3

    ஒரு வாணலியில் 1 கரண்டி எண்ணெய் ஊற்றி, தாளிக்க தேவையான அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்

  4. 4

    துருவிய கேரட், மாங்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்

  5. 5

    வேக வைத்த கம்பு உருண்டைகளை வாணலியில் போட்டு கிளறவும்

  6. 6

    தேவையான அளவு உப்பு சேர்த்து தேங்காய் துருவலையும் சேர்த்து மெதுவாக கிளறி இறக்கவும்

  7. 7

    சுவையான சத்தான கம்பு சுண்டல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Udayabanu Arumugam
Udayabanu Arumugam @cook_26989947
அன்று

Similar Recipes