பாம்பே அல்வா

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
20-30 பரிமாறுவது
  1. 1 கப் சோள மாவு
  2. 2 கப் தண்ணீர்
  3. 2-1/2 சர்க்கரை
  4. 2 கப் தண்ணீர்
  5. 3/4 கப் நெய்
  6. 15-20 முந்திரி
  7. சிறிதுஏலங்காய் தூள்
  8. 1/2 எலுமிச்சை சாறு
  9. கலர் பவுடர்

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    பாத்திரத்தில் சோள மாவு தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்

  2. 2

    அகலமான பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும் பிறகு இதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்

  3. 3

    குறைந்த தீயில் மெதுமெதுவாக கரைத்து வைத்திருக்கும் சோள மாவு கரைசலை அதில் ஊற்றி கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்... 15 நிமிடம் கழித்து கெட்டியாகி வரும்

  4. 4

    இப்போது நெய்யை சிறுக சிறுக ஊற்றவும் ஒவ்வொரு முறையும் நெய் முழுவதுமாக இழுத்த பிறகு மற்றொரு முறை நெய் விடவும் இதேபோல் நான்கு முறை சிறுகச்சிறுக 10 நிமிட இடைவெளியில் விடவும்

  5. 5

    இறுதியாக நெய் சேர்க்கும் பொழுது உடைத்த முந்திரி கலர் தூள் சேர்த்து கை விடாமல் நன்றாக கிளறவும் பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்

  6. 6

    40 நிமிடம் கழித்து நெய் வெளியேறிய வாணலியில் ஒட்டாமல் வரும் அல்வா பார்ப்பதற்கு பளபளவென இருக்கும் அவ்வாறு இருந்தால் அல்வா தயாராகி விட்டது என அர்த்தம்

  7. 7

    பாத்திரத்தில் நெய் தடவி அல்வாவை அதில் ஊற்றி சரி சமப்படுத்தி ஒரு இரண்டு மணி நேரம் வைக்கவும்

  8. 8

    இரண்டு மணி நேரம் கழித்து அல்வாவை துண்டுகளாக போடவும்

  9. 9

    சுவையான அட்டகாசமான பாம்பே அல்வா தயார் நீங்களும் இதை தயாரித்துப் பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

கமெண்ட் (5)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
மனதை அள்ளுது பாம்பே ஹல்வா...
சுவைக்க தூண்டி நாவில் நீர் ஊறு து ஜொல் லா...
இது விஜி பிரேம் அவர்களின் மதுரை விருந்து
என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுக்கு கிடைக்க
போகுது குக் பேடின் விருது..

Similar Recipes