வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#Kids2 அருமையான சுவையில் வாழைப்பழமும் சத்துமாவும் வைத்து கேக் செய்யலாம் வாங்க

வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)

#Kids2 அருமையான சுவையில் வாழைப்பழமும் சத்துமாவும் வைத்து கேக் செய்யலாம் வாங்க

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 நபர்
  1. 3வாழைப்பழம்
  2. 1/4 கப் எண்ணெய்
  3. 1/2 கப் சர்க்கரை
  4. 1/2 கப் சத்துமாவு
  5. 1/2 கப் கோதுமை மாவு
  6. 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா
  7. 1 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  8. 1 ஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்
  9. 1/4 கப் பால்
  10. சிறிதளவுநட்ஸ்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வாழைப்பழத்தை முதலில் நன்கு மசித்து கொள்ளுங்கள்.

  2. 2

    இதனுடன் 1/4 கப் எண்ணெய் 1/2 கப் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு சல்லடையில் 1/2 கப் சத்துமாவு 1/2 கப் கோதுமை மாவு சேர்க்கவும்.(பதிலாக 1 கப் சத்துமாவு சேர்த்து கொள்ளலாம்)

  4. 4

    பிறகு 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா,1 ஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து கொள்ளவும்.

  5. 5

    இதை கலந்து விடவும்.பிறகு 1/4 கப் பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விடவும்.

  6. 6

    1 ஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்தால் கேக் பெட்டெர் தயார்

  7. 7

    கப் கேக் tray எடுத்து அதில் மாவை ஊற்றி அதன் மேல் சிறிதளவு நட்ஸ் சேர்த்து tray வை 4 தடவை தட்டி கொள்ளவும்.இதை 180'c ஓவெனில் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.(வைப்பதற்கு முன் 10 நிமிடம் ஓவனை சூடாக்கி கொள்ளவும்)

  8. 8

    20 நிமிடம் கழித்து குச்சி வைத்து குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும்.அவ்வளவுதான் கப் கேக் தயார்.

  9. 9

    ஆறியதும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சத்துமாவு கப் கேக் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
அன்று

Similar Recipes