எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 1 கப் கடலைமாவு
  2. 2 கப் சர்க்கரை
  3. 1/4 கப் நெய்
  4. 15 ஏலக்காய்
  5. எண்ணெய் பொரிப்பதற்கு
  6. 1 கைப்பிடி அளவு முந்திரி
  7. 1 கைப்பிடி அளவு திராட்சை

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் சர்க்கரை கரைந்து ஒரு கம்பி பதம் வந்ததும் இடித்த ஏலக்காய் சேர்த்து கலந்து இறக்கவும்

  2. 2

    கடலைமாவை சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து பின் சூடான எண்ணெயில் ஜர்னியில் ஊற்றவும் தேய்க்க கூடாது தட்ட வேண்டும் முத்து முத்தாக பூந்தி பொரித்து எடுக்கவும்

  3. 3

    பூந்தி ஐ மொறு மொறு என்று எடுக்காமல் 70% வெந்ததும் மெத்தென்று எடுக்கவும்

  4. 4

    பின் பொரித்த பூந்தி ஐ உடனுக்குடன் சர்க்கரை பாகில் போடவும் நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை வறுத்து கொட்டவும்

  5. 5

    இரண்டு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்

  6. 6

    சுவையான ஆரோக்கியமான பூந்தி லட்டு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes