சேப்பக்கிழங்கு தவா ப்ரை (Sepangkilangu tawa fry recipe inTamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#GA4
#Week 11
#Arbi
சேப்பங்கிழங்கு இயற்கையான உணவு . இதில் கொழுப்பு சத்து இல்லை குறைவான கலோரிகள் கொண்டுள்ளதால் உடல் எடை குறைப்பவர்கள் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

சேப்பக்கிழங்கு தவா ப்ரை (Sepangkilangu tawa fry recipe inTamil)

#GA4
#Week 11
#Arbi
சேப்பங்கிழங்கு இயற்கையான உணவு . இதில் கொழுப்பு சத்து இல்லை குறைவான கலோரிகள் கொண்டுள்ளதால் உடல் எடை குறைப்பவர்கள் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 500 கிராம் சேப்பங்கிழங்கு
  2. உப்பு தேவையான அளவு
  3. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  5. 1 1/2 ஸ்பூன் கான்பிளவர் மாவு
  6. 1/2 ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது
  7. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில்,சேப்பங்கிழங்கை 10 நிமிடம் ஊற வைத்து நன்றாக கழுவிக் கொள்ளவும்.குக்கரில் சேப்பங்கிழங்கு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

  2. 2

    சிறிதளவு உப்பு சேர்த்து 2 வீசில் விடவும்.பின்பு,கேஸ் அடங்கியதும் வேறொரு தட்டில் மாற்றி ஆற வைக்கவும்.

  3. 3

    பிறகு தோல் உரித்து,தேவையான வடிவில் நறிக்கிக் கொள்ளவும்.படத்தில் காட்டியவாறு.

  4. 4

    ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கான்பிளவர் மாவு சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    இஞ்சி,பூண்டு விழுது,தேவையான அளவு உப்பு சேர்த்து கையால் நன்கு பிசையவும்.

  6. 6

    சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்,பிறகு நறுக்கி வைத்த கிழங்கை சேர்த்து கிளறவும்.மசாலா கிழங்குடன் நன்றாக ஒட்டிக்கனும்.வேறொரு தட்டிற்கு மாற்றி ஒரு 20 நிமிடம் காய வைக்கவும்.

  7. 7

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேறவும் சிறிதளவு எண்ணெய் விட்டு மசாலா கிழங்கை போட்டு மிதமான சூட்டில் பொரிக்கவும்.

  8. 8

    சுவையான,மொறு மொறுப்பான சேப்பங்கிழங்கு தவா ப்ரை தயார்.🤩குறிப்பு: கிழங்கை ரொம்ப வேக வைக்க கூடாது,1 or 2 விசில் விட்ட போதும். பொரிக்க கொஞ்சமாக எண்ணெய் விட்டால் போதும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
அன்று
Pandhalkudi

Similar Recipes