எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 கப் பாசுமதி அரிசி
  2. 1/4 கிலோ மட்டன்
  3. 1டீ ஸ்பூன் மிளகாய் தூள்
  4. 2டீ ஸ்பூன் பிரியாணி மசாலா தூள்
  5. 2 பச்சை மிளகாய்
  6. 1 பெரிய வெங்காயம்
  7. 1 தக்காளி
  8. 1 கப் புதினா, மல்லி
  9. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  10. 1/4 கப் தயிர்
  11. 1டீ ஸ்பூன் முழு கரம் மசாலா
  12. 1டீ ஸ்பூன் நெய்
  13. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  14. 1.25 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    அரிசியை தண்ணீரில் ஊறவைக்கவும்.

  2. 2

    மட்டன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து 3 சத்தம் வரும் வரை வேக வைக்கவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் கரம் மசாலா, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின்பு அதில் வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

  5. 5

    வெங்காயம் வெந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

  6. 6

    தக்காளி நன்கு வதங்கியதும் பிரியாணி மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் அதில் தயிர் சேர்த்து கலந்து கொதிக்க வைக்கவும்

  7. 7

    பின்பு அதில் வேக வைத்த கறி, கலந்து கொதிக்க விடவும். பின்பு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  8. 8

    கொதி வர தொடங்கியதும் வடித்த அரிசி சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்

  9. 9

    சாதம் தண்ணீரில் குறைந்ததும் மூடி போட்டு, மூடியில் ஓட்டை இருந்தால் அதில் ஒரு கிராம்பு துண்டு வைத்து அதில் அடைக்கவும்

  10. 10

    15 நிமிடம் குறைந்த தீயல் வைத்து வேக வைக்கவும். 20 நிமிடம் மூடி துறக்காமல் வைத்து பின் பரிமாறவும்.

  11. 11

    உதிரி உதிரியாய் தம் பிரியாணி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes