கத்தரிக்காய் கொண்டை கடலை குழம்பு (Kathirikkai kondakadalai kulambu recipe in tamil)

கத்தரிக்காய் கொண்டை கடலை குழம்பு (Kathirikkai kondakadalai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மேற்கூறிய எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் இரண்டாக அரிந்து கொள்ளவும். தக்காளி தேவை என்றால் சிறிய அளவில் எடுத்து பொடியாக அரிந்து கொள்ளவும். கத்திரிக்காயை செய்யப் போகும் சமயம் அரிசி கழுவிய தண்ணீர் அரிந்து போட்டுக் கொள்ளவும். புளி ஊற வைத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் வர கொத்தமல்லி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம்,மிளகு, அரிசி, மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் சிவக்க வறுத்துக்கொள்ளவும். இவற்றை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- 3
அதே வாணலியில் மீதி எண்ணெயை சேர்த்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். தங்களுக்கு தேவை என்றால் தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இவற்றில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, சாம்பார் தூள், மஞ்சள் தூள்,சேர்த்து கொள்ளவும். அரிந்த கத்திரிக்காயை சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
- 4
காய் வெந்தவுடன் புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்து பச்சை புளி வாசம் போனபின்பு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து ஒரு கொதி விடவும். கடைசியில் வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். கத்திரிக்காய் கொண்டை கடலை புளிக்குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#Grand2என்னுடைய ஸ்பெஷல் ரெசிபி இது. Meena Ramesh -
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh -
வெள்ளை கொண்டை கடலை சுண்டல் (Vellai kondakadalai sundal recipe in tamil)
#poojaஇன்றைய நவராத்திரி மாலை நேர பூஜை பிரசாதம் வெள்ளை கொண்டை கடலை சுண்டல். Meena Ramesh -
பாகற்காய்,பச்சை சுண்டைக்காய், வெள்ளை கடலை வத்தக் குழம்பு..(vathal kulambu recipe in tamil)
இந்த வத்தக் குழம்பு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் ஏனென்றால் இதில் பாகற்காய் சுண்டைக்காய் கொண்டைக்கடலை மூன்றும் சேர்த்து இருப்பதால். இவை மூன்றுமே சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.எப்பொழுதும்போல் வறுத்து அரைத்து குழம்பில் சேர்த்து வத்த குழம்பு வைக்க வேண்டும். Meena Ramesh -
கொண்டை கடலை குழம்பு
#goldenapron3#அன்புஎன் அக்கா சொல்லி கொடுத்தது .ப்ரோடீன் ரிச் குழம்பு .இட்லி தோசை சப்பாத்தி சாதம்க்கு ஏற்றது . Shyamala Senthil -
கத்தரிக்காய் பாசிப்பயிறு குழம்பு / Kathirikai pachippayaru curry Recipe in tamil
#magazine2இது பழைய காலத்தில் இருந்து செய்து வரும் உணவு.சாப்பாட்டில் பிசைந்து சாப்பிடவும்,சப்பாத்திக்கு side dish ஆகவும் சாப்பிட சுவையாக இருக்கும்.ஆரோக்கியம் நிறைந்த உணவு.எளிதில் செய்யலாம். புளியோதரை சாதத்திற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட இது சுவையாக இருக்கும். எங்கள் வீட்டில் புளியோதரை தயார் செய்தால் இதை கட்டாயமாக சைடு டிஷ் ஆக செய்வோம். Meena Ramesh -
கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)
#arusuvai2 எந்த கீரையிலும் பருப்பு சேர்த்து குழம்பு வைக்கலாம். இது அரைக்கீரையில் செய்த பருப்பு குழம்பு. எப்போதும் கீரைக்கூட்டு கீரை பொரியல் கீரை மசியல் கீரை கடைசல் என்று செய்வதை தவிர்த்து ஒருமுறை இப்படி செய்து பார்க்கலாம். Meena Ramesh -
-
-
-
பொங்கல் குழம்பு (pongal kulambu recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் பண்டிகை அன்று எல்லா வகையான காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை சூரியனுக்குப் படைத்து பூஜை செய்வது வழக்கம். படைத்த காய்கறிகளளைக் கொண்டு பொங்கல் பண்டிகை அன்று அவியல், சாம்பார், பொரியல், கூட்டு, பச்சடி என்று சமைத்து மீதமுள்ளவற்றை மறுநாள் குழம்பு செய்வது வழக்கம். அந்தக் குழம்புக்கு பொங்கல் குழம்பு என்று பெயர். Natchiyar Sivasailam -
வடக தேங்காய் குழம்பு (Vadaka thenkaai kulambu recipe in tamil)
#coconutஎங்கள் மாமியார் வீட்டு பக்கதார் வழக்கமாக அடிக்கடி செய்யும் புளி குழம்பு இது.இந்த கறி வடகம் எங்கள் பக்கத்து ஸ்பெஷல்.வெயில் காலம் வந்தால் நிறைய செய்து சேமித்து வைத்து கொள்வார்கள்.இதில் நெய் சேர்த்து சூடான சத்தத்துடன் கை குழந்தைகளுக்கு ஊட்டி விடுவோம். நாமும் சிறிது உப்பு சேர்த்து நெய் மற்றும் இந்த வடகத்தை பொரித்து சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.மேலும் தக்காளி பருப்பு சாம்பார்,மாங்காய் சாம்பார்,கீரை போன்றவற்றில் வறுத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.இந்த வடகம் உளுந்து சின்ன வெங்காயம்,சீரகம் போன்ற பொருட்களை கொண்டு செய்ய வேண்டும்.இந்த வடக ரெசிபி வேண்டுபவர் Bk recipies பார்த்து தெரிந்து கொள்ளவும். நான் ஒருமுறை அவர்கள் வெளி யிட்டு இருந்ததை பார்த்தேன்.இதை நாங்கள் கறி வடகம் என்று சொல்வோம். Meena Ramesh -
முருங்கக்காய்,கத்தரிக்காய் மசாலா கூட்டு (Murunkaikaai, kathirikkaai masala kootu recipe in tamil)
#coconutஎனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல காரத்துடன் செய்து சுட சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் வாய்க்கு மிகவும் ருசியாக இருக்கும்.😋😛 Meena Ramesh -
சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு (Suraikkaai thattapayaru kulambu recipe in tamil)
#arusuvai5 Meena Ramesh -
கத்தரிக்காய். பிடலா.(marriage style brinjal pitla recipe in tamil)
#VKகல்யாணவீட்டில் செய்யும் கத்திரிக்காய் பிட்லா..இது கிராமப்புறங்களில் செய்யும் மிக சுவை யான பழமையான குழம்பு...... பார்ப்பதற்கு சாம்பார் போல் தோன்றினாலும்,மிளகு, மற்றும் வறுத்த தேங்காயின் ருசியுடன் வாசமாகவும் சுவையாகவும் இருக்கும்... Nalini Shankar -
-
ரேஷன் பருப்பு கூட்டு(பீர்க்கங்காய்) (Peerkangai kootu recipe in Tamil)
#everyday2ரேஷன் பருப்பில் செய்த கூட்டு.மிதமான காரத்தில் பருப்பு சேர்த்து செய்ததால் குழந்தைகளுக்கும் நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து ஊட்டலாம். Meena Ramesh -
-
-
நூல்கோல் பச்சைப் பட்டாணி பருப்பு குழம்பு(noolkol pattani paruppu kulambu recipe in tamil)
இந்த குழம்பு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது நூல்கோல் காய் சேர்த்துக்கொள்வது சர்க்கரை நோயை குறைக்கும் மேலும் பச்சை பட்டாணி கண்பார்வைக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
சுரைக்காய் சாம்பார் சாதம்(in pressure cooker) (Suraikkaai sambar satham recipe in tamil)
# steamசுரைக்காயை வைத்து எளிதான சுவையான சாம்பார் சாதம் இன்று செய்தேன். குக்கெரில் ஆவியில் வேக வைத்து செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. சுரைக்காய் தவிர வேறு காய்கள் எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம். மேலும் இரண்டு மூன்று காய்கள் சேர்த்து கதம்ப சாம்பார் சாதம் ஆகவும் செய்யலாம். Meena Ramesh -
-
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#myownrecipe Sarvesh Sakashra -
குருணை பருப்பு ரசம் (Kurunai paruppu rasam recipe in tamil)
#jan1 குருணை பருப்பை வேகவைத்து இனிப்பு மற்றும் காரம் செய்ய வடித்த தண்ணீரில் வைக்கும் ரசம். எங்கள் வீட்டில் நொய் பருப்பு செய்தால் இனிப்பு காரம் மற்றும் ரசம் வைப்போம். Meena Ramesh -
நிலக்கடலை குழம்பு / nilakadalai kulambu reciep in tamil
#frienshipday @Shyamala SenthilSister உங்களுடைய ஸ்பெஷல் ரெசிபி பச்சை கடலை குழம்பு இதோ..என்னுடைய friendship day பரிசாக உங்களுக்கு.happy friendship day 💐♥️ to you. Meena Ramesh -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 2(ennai kahirikkai kulambu recipe in tamil)
#made2எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பட்டை லவங்கம் கரம் மசாலா தூள் சேர்த்தும் செய்யலாம் .அவை இல்லாமல் புளி குழம்பு போலவும் வைக்கலாம்.மசாலா சேர்த்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். Meena Ramesh -
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
More Recipes
கமெண்ட் (2)