ரேஷன் பருப்பு கூட்டு(பீர்க்கங்காய்) (Peerkangai kootu recipe in Tamil)

#everyday2
ரேஷன் பருப்பில் செய்த கூட்டு.மிதமான காரத்தில் பருப்பு சேர்த்து செய்ததால் குழந்தைகளுக்கும் நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து ஊட்டலாம்.
ரேஷன் பருப்பு கூட்டு(பீர்க்கங்காய்) (Peerkangai kootu recipe in Tamil)
#everyday2
ரேஷன் பருப்பில் செய்த கூட்டு.மிதமான காரத்தில் பருப்பு சேர்த்து செய்ததால் குழந்தைகளுக்கும் நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து ஊட்டலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ரேஷன் பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நான்கைந்து சவுண்டு விட்டு வேக வைத்துக் கொள்ளவும். பீர்க்கங்காயை தோல் நீக்கி படத்தில் காட்டியுள்ளபடி சதுரமாக அரிந்து கொள்ளவும். அரை அளவு பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- 2
பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு அரிந்த பீர்க்கங்காயை சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், சாம்பார் தூள்,உப்பு சேர்த்து காய் வேகும் அளவிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். மிதமான தீயில் மூடி வைத்து காயை நன்கு வேகவிடவும்.
- 3
காய் நன்கு வெந்தவுடன் வேகவைத்த பருப்பை சேர்க்கவும். மீண்டும் மூடி வைத்து 3 நிமிடம் வரை மிதமான தீயில் அடுப்பில் வைத்திருக்கவும். இப்போது கூட்டு பதத்திற்கு வந்தவுடன் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி விடவும்.கடைசியாக பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை சேர்த்துக் கொள்ளவும்.சுவையான பீர்கங்காய் கூட்டு ரேஷன் பருப்பில் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
முருங்கக்காய்,கத்தரிக்காய் மசாலா கூட்டு (Murunkaikaai, kathirikkaai masala kootu recipe in tamil)
#coconutஎனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல காரத்துடன் செய்து சுட சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் வாய்க்கு மிகவும் ருசியாக இருக்கும்.😋😛 Meena Ramesh -
பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு (Peerkankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)
#arusuvai5 நான் செய்யும் கூட்டு வகைகளில் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தது . Hema Sengottuvelu -
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkangai Thol Thuvaiyal Recipe in Tamil)
#everyday2பீர்ககங்காய் தோலில் செய்யப்படும் துவையல்.இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
சௌசௌ கூட்டு(Chow Chow spicy gravy for rice and chappathi recipe in tamil)
சௌசௌ கூட்டு ஸ்பைசி பொருட்கள் சேர்த்து கிரேவி போல் செய்தேன் இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அதேசமயம் சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும். Meena Ramesh -
-
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai kootu recipe in tamil)
பீர்க்கங்காய் அதிக நார் சத்து உள்ள காய் ஆகும். இந்த கூட்டு சாதம், சப்பாத்தி, தோசை ஆகியவற்றுடன் பரிமாறலாம். Manjula Sivakumar -
பீர்க்கங்காய் சாம்பார் (Peerkankaai sambar recipe in tamil)
இந்த சாம்பார் சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். #அறுசுவை5 Sundari Mani -
சேனை குழம்பு(yam curry recipe in tamil)
#ed1சேனை குழம்பு வெங்காய சாம்பார் சுட சாதத்தில் சூடாக ஊற்றி நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)
#arusuvai2 எந்த கீரையிலும் பருப்பு சேர்த்து குழம்பு வைக்கலாம். இது அரைக்கீரையில் செய்த பருப்பு குழம்பு. எப்போதும் கீரைக்கூட்டு கீரை பொரியல் கீரை மசியல் கீரை கடைசல் என்று செய்வதை தவிர்த்து ஒருமுறை இப்படி செய்து பார்க்கலாம். Meena Ramesh -
சுரக்காய் பருப்பு கூட்டு (Suraikkai Paruppu Kootu Recipe in Tamil)
#everyday2 Sree Devi Govindarajan -
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai koottu recipe in tamil)
#Kerala #photoகேரளாவில் காய்கறி கூட்டு வகைகள் மிகவும் பிரபலம்.நம்மைப் போல் அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட மாட்டார்கள் பெரும்பாலும் தேங்காய் சீரகம் மிளகாய் அரைத்து கூட்டாக செய்து சாப்பிடுவார்கள். Meena Ramesh -
-
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த பாரம்பர்ய பருப்பு உருண்டை குழம்பு என் செமுறையில்.... Nalini Shankar -
பீர்க்கங்காய் சட்னி(peerkangai chutney recipe in tamil)
#queen2ஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. #சட்னி Lakshmi Sridharan Ph D -
-
பீன்ஸ் பருப்பு உசிலி
இந்த பருப்பு உசிலி தொட்டுக்கொள்ளவும் சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிடவும் ஆப்டாக இருக்கும் Jegadhambal N -
கிளாக்காய் சாம்பார்😋 (Kalakkaai sambar recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு மசைக்கையின் போது பருப்பு பிடிக்காது.ஆனால் பருப்பு புரோட்டீன் கொண்டிருப்பதால் பருப்பு உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். கிலாக் காய் புளிப்பு சுவை மிகுந்தது.மேலும் மசைக்கை காரணமாக ஏற்படும் வாந்தியை கட்டு படுத்த கூடிய சுவை உடையது.பருப்பில் இந்த காயை இரண்டாக அரிந்து விதை எடுத்து சேர்த்து உப்பு காரம் கொஞ்சம் அதிகமாக சேர்த்து சாம்பார் வைத்து குடுத்தால் கர்ப்பிணி பெண்கள் விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
வாழை பூ பருப்பு உசிலி(valaipoo paruppu usili recipe in tamil)
#birthday1பருப்பு உசிலி என்றாலே பீன்ஸ் உசிலி தான் எல்லோர் ஞ்சாபக்கத்திற்கும் வரும், வாழைப்பூ வைத்தும் செய்யலாம்.... இதுவும் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த மானது... Nalini Shankar -
முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
"பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil
#Friendship#பீர்க்கங்காய் கூட்டு#குக்பேட் இந்தியா Jenees Arshad -
-
கிள்ளு வர மிளகாய் சாம்பார்🌶️(Killu varamilakaai sambar recipe in tamil)
#arusuvai2இந்த வகை சாம்பார், சாம்பார் தூள் அல்லது வரமிளகாய்த்தூள் சேர்க்காத சாம்பார் ஆகும். வரமிளகாய் கிள்ளி செய்யும் சாம்பார். சாப்பாட்டிற்கு சுவையாக இருக்கும். மோர் மிளகாய் இதற்கு தகுந்த ஜோடி. உருளைக்கிழங்கு வருவல், பொடிமாஸ் சேனைக்கிழங்கு சாப்ஸ் போன்றவை தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். அப்பளம், வடகம் போன்றவையும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
பீர்க்கங்காய் பருப்பு பிரட்டல் (Peerkankai paruppu pirattal recipe in tamil)
#ga4#week13 Santhi Chowthri -
-
காய்கறி பருப்பு கூட்டு (kaaikari paruppu kootu recipe in Tamil)
மீதமுள்ள காய் மீந்த பருப்பு வகைகள் ( மாத கடைசி கூட்டு) Laksh Bala
More Recipes
கமெண்ட்