சிக்கன் பிரியாணி 🐣🐥🐤🐔🥘🍛🍛 (Chicken biryani recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

சிக்கன் பிரியாணி 🐣🐥🐤🐔🥘🍛🍛 (Chicken biryani recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 2 கப்அரிசி - (30 நிமிடங்கள் ஊற வைக்கவும்)
  2. 1/2 கிலோசிக்கன்
  3. 3வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 2பச்சைமிளகாய்
  6. கறிவேப்பிலை - சிறிதளவு
  7. கொத்தமல்லி - கைப்பிடியளவு
  8. புதினா - கைப்பிடியளவு
  9. 1/4 கப்தயிர்
  10. 2 மேஜைக்கரண்டிஎண்ணெய்
  11. 2 தே.கநெய்
  12. 2மேசைகரண்டிமுந்திரி
  13. 2மேசைகரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  14. 2 தே.கமிளகாய்த்தூள்
  15. 1/2 தே.ககரம் மசாலா தூள்
  16. 2மேசைகரண்டிகாஷ்மீரி மிளகாய்த்தூள்
  17. தாளிக்க தேவையான பொருட்கள்
  18. 1 தே.கசோம்பு
  19. 5கிராம்பு
  20. 3பிரிஞ்சி இலை
  21. சிறிதளவுபட்டை
  22. 2ஏலக்காய்
  23. 2நட்சத்திர சோம்பு

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    பிறகு தாளிக்கக் கொடுத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து வதங்கியதும். அதில் முந்திரிப்பருப்பு, வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கி கொள்ளவும்.

  3. 3

    பிறகு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் இரண்டாக வெட்டி சேர்த்துக்கொள்ளவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  4. 4

    பச்சை வாசனை போக வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து நன்றாக மசிய வதக்கி கொள்ளவும். அதனைத் தொடர்ந்து புதினா, கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக வதங்கியதும் சிக்கன் சேர்த்து கொள்ளவும்.

  5. 5

    பின் தயிர் மசாலா பொருட்களை சேர்த்து சிக்கனில் நன்றாக கலந்து விடவும்.

  6. 6

    பிறகு உப்பு,ஊற வைத்த அரிசி சேர்த்து ஐந்து நிமிடம் வதங்கியதும். 1:2 என்ற அளவில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

  7. 7

    தண்ணீர் நன்றாக கொதிக்க தொடங்கியதும் சுவை பார்த்து உப்பு,காரம் சற்று தூக்கலாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். குக்கரை மூடி 3 விசில் வைத்து வேக வைக்கவும்.

  8. 8

    பிரியாணி தயாரானதும் அதில் கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.

  9. 9

    சுவையான சிக்கன் பிரியாணி வேக வைத்த முட்டை,வெங்காயப் பச்சடியுடன் சாப்பிட தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes