தயிர் வெந்தயக்கீரை பூரி (Dahi Methi leaves Poori recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#Grand2
தயிர் வெந்தயக்கீரை பூரி எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது.😍😍

தயிர் வெந்தயக்கீரை பூரி (Dahi Methi leaves Poori recipe in tamil)

#Grand2
தயிர் வெந்தயக்கீரை பூரி எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது.😍😍

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30mins
2 பரிமாறுவது
  1. 1கட்டு வெந்தயக் கீரை
  2. 1 1/2கப் கோதுமை மாவு
  3. 1/2 டீஸ்பூன் ஓமம்
  4. உப்பு
  5. 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1சிறிய கப் தயிர்
  7. பூரியை பொரிக்க தேவையான ஆயில்

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    1கட்டு வெந்தயக் கீரையை வாங்கி கழுவி பொடியாக நறுக்கி, 1 1/2கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து விடவும்.

  2. 2

    1/2 டீஸ்பூன் ஓமம், 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து விடவும்.

  3. 3

    1சிறிய கப் தயிர் எடுத்து வைக்கவும். 4 டீஸ்பூன் தயிர் சேர்த்து பிசைந்து விடவும்.மேலும் தேவை யென்றால் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.

  4. 4

    1டீஸ்பூன் ஆயில் விட்டு மாவை மூடி வைக்கவும். பூரிகளை பொரிக்க தேவையான ஆயிலை அடுப்பில் வைத்து சூடேற்றவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

  5. 5

    சப்பாத்தி தேய்க்கும் கல்லில் சிறு உருண்டைகளாக பிடித்த மாவை தேய்த்து வைக்கவும். ஆயிலில் ஒரு ஒரு பூரிகளாக இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  6. 6

    வெந்தயக்கீரை பூரிகளை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

  7. 7

    சுவையான தயிர் வெந்தயக் கீரை பூரி ரெடி😋😋

  8. 8

    தயிர் வெந்தயக் கீரை பூரியை தொட்டு சாப்பிட உருளைக்கிழங்கு மசால் செய்து வைத்தேன். அருமையாக இருந்தது.😍😍

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes