பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் குருமா (Poori and urulaikilanku masal kuruma recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. பூரி மாவு செய்ய:
  2. 1/2 கிலோ கோதுமை மாவு
  3. 2 டேபிள்ஸ்பூன் ரவை
  4. 2 ஸ்பூன் சர்க்கரை
  5. உப்பு சிறிதளவு
  6. எண்ணெய் பொரிப்பதற்கு
  7. மசால் செய்ய:
  8. 1/2 கிலோ உருளைக்கிழங்கு
  9. 2 வெங்காயம்
  10. 3 தக்காளி
  11. 5 வரமிளகாய்
  12. 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா தூள்
  13. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  14. 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  15. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  16. 5 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  17. 1 ஸ்பூன் கடுகு
  18. 1 ஸ்பூன் சோம்பு
  19. கறிவேப்பிலை சிறிது
  20. கொத்தமல்லி தழை சிறிது
  21. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவுடன் ரவை உப்பு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு பிசிறி விடவும் பின் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும் பின் அரை மணி நேரம் வரை ஊறவிடவும் பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் பின் சின்ன சின்ன சப்பாத்தி ஆக திரட்டி சூடான எண்ணெயில் போடவும்

  2. 2

    ரவை சேர்ப்பது நல்ல மொறுமொறுப்பாக இருக்கும் அமுந்து போகாது சர்க்கரை சேர்ப்பது மேலே ப்ரவுன் நிறம் சைனிங்கா வரும் நன்றாக உப்பி கொண்டு வர வேண்டும் எண்ணெய் நல்லா சூடாக இருப்பது அவசியம் இரண்டு புறமும் வேகவிட்டு பொன்னிறமாக எடுக்கவும்

  3. 3

    புஸ் புஸ் என பூரி ரெடி, கிழங்கு மசாலா செய்ய உருளைக்கிழங்கு ஐ வேகவைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்

  4. 4

    பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் கரம் மசாலா தூள், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள்,சேர்த்து வதக்கவும்

  5. 5

    தக்காளி வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் பின் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

  6. 6

    சூப்பரான புஸ் புஸ் என பூரி கண்ணை பறிக்கும் கிழங்கு மசாலா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes