சிக்கன் கமகம பிரியாணி‌ (Flavourful Chicken Biryani recipe in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#GA4
பிரியாணி நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு உணவாக தற்போதைய நாகரீக காலத்தில் மாறி உள்ளது. அவ்வாறு மணப்பதற்கு பிரியாணியில் சேர்க்கப்படும் ரகசிய பொருட்கள், அளவு போன்றவற்றை இந்த பதிவில் காண்போம்.

சிக்கன் கமகம பிரியாணி‌ (Flavourful Chicken Biryani recipe in tamil)

#GA4
பிரியாணி நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு உணவாக தற்போதைய நாகரீக காலத்தில் மாறி உள்ளது. அவ்வாறு மணப்பதற்கு பிரியாணியில் சேர்க்கப்படும் ரகசிய பொருட்கள், அளவு போன்றவற்றை இந்த பதிவில் காண்போம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பேர்
  1. 1/2 கிலோ கோழி கறி
  2. 100 கிராம் பெரிய வெங்காயம்
  3. 1கைப்பிடி மல்லி
  4. 1 கைப்பிடி புதினா
  5. 2 ஸ்பூன் சோம்பு
  6. 1 ஸ்பூன் சோம்பு
  7. 1 ஸ்பூன் மிளகு
  8. ஜாதிக்காய் சிறிய துண்டு
  9. ஜாதிபத்திரி சிறிது
  10. 3" துண்டு துண்டு பட்டை
  11. 5கிராம்பு
  12. 5 ஏலக்காய்
  13. 4 மாராட்டி மொக்கு
  14. 3 அண்ணாச்சி பூ
  15. 3பிரியாணி இலை
  16. 5 பச்சை மிளகாய்
  17. 1/2 கிலோ சீரகச்சம்பா அரிசி
  18. 100 தக்காளி
  19. 2 கப் தயிர்
  20. உப்பு
  21. 1 ஸ்பூன் நெய்
  22. 50 மில்லி கடலைஎண்ணெய்
  23. 3 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  24. 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  25. 1 ஸ்பூன் மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    பட்டை, கிராம்பு, சோம்பு, அண்ணாசி பூ,மராட்டி மொக்கு,ஏலக்காய், மிளகு, சீரகம், பிரிஞ்சி இலை, போன்றவற்றை மணம் வரும் வரை மிதமான தீயில் வறுத்து பொடிக்கவும்...

  2. 2

    ஒரு பாத்திரத்தில் அரிசியின் அளவிற்கு ஏற்ப இரண்டு மடங்கு தண்ணீர் வைத்து நன்கு கொதிக்க விட்டு அதில் பாதி அளவு நறுக்கிய மல்லி, புதினா இலைகள் சேர்க்கவும்.1/2 பதம் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

  3. 3

    மற்றொரு பாத்திரத்தில் கடலை எண்ணெயில் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மராட்டி மொக்கு, அண்ணாச்சி பூ இவற்றில் ஒன்று,ஒன்று சேர்த்து நன்கு பொரிய விட்டு, பச்சைமிளகாய் சேர்க்கவும்...

  4. 4

    பின்னர் மெல்லியதாக வெட்டிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதனுடன் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  5. 5

    இஞ்சி-பூண்டு வதங்கிய பின்பு அரைத்து வைத்துள்ள பிரியாணி மசாலா பொடி, மஞ்சள் பொடி சேர்த்து நன்கு வதக்கவும். (தேவைப்பட்டால் மிளகாய்த்தூள் சேர்க்கவும்…நான் கோழி கறியில் சேர்த்து ஊற வைத்தால் இங்கு சேர்க்கவில்லை).

  6. 6

    நறுக்கிய மல்லி புதினா தழை சேர்த்து எண்ணெயிலேயே நன்கு வதக்கி, பின்னர் தக்காளி,தயிர் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும். உப்பு பாதியளவு சேர்க்கவும்.

  7. 7

    இதனுடன் ஊற வைத்த சிக்கன் சேர்த்து நன்கு வதக்கி, 3 நிமிடம் வேக விடவும்.

  8. 8

    பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து சிக்கனை முழுவதுமாக வேகவிடவும்.

  9. 9

    இதனிடையே தண்ணீர் கொதித்து வரும் பொழுது அரிசியை சேர்த்து நன்கு வேகவிடவும்.

  10. 10

    அரிசி 90% நன்கு வெந்த பின்பு, ஒரு சிறிய கப்பில் அரிசி தண்ணீர் தனியே எடுத்து வைத்து விட்டு, பின்னர் அரிசியை வடித்து தனியே வைக்கவும்.

  11. 11

    சிக்கனில் தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் பொழுது,அதன் கீழே பயன்படுத்தாத தோசைக்கல் வைத்து தம் செய்துவிட்டு பின்னர் வடித்த அரிசியை சேர்க்கவும்.

  12. 12

    அரிசியை,மசாலா கலவையுடன் நன்கு கலந்து,தேவைப்பட்டால் எடுத்து வைத்துள்ள அரிசி தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து,சமம் செய்து பின்னர் நெய் மேலே ஊற்றவும்......

  13. 13

    இதனை காற்றுப் புகாதவாறு மூடி அதன் மீது சுடுநீர் பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம் செய்யவும். அடுப்பை மிகச் சிறிய தீயில் வைக்கவும்.

  14. 14

    20 நிமிடத்திற்கு பின்பு சாதம் உடையாமல் கிளறவும்.

  15. 15

    இதனை சூடாக இலையில், சிக்கன் கிரேவி உடன் பரிமாறினால் மிகுந்த சுவையாக இருக்கும் வீடு முழுவதும் இதன் நறுமணம் இருக்கும். இந்த கமகமக்கும் பிரியாணி உங்கள் வீட்டிலும் செய்து குடும்பத்தினரும் அனுபவித்து சுவையுங்கள்......

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes