உளுந்து பருப்புப்பொடி (Urad dal powder) (Ulunthu paruppu podi recipe in tamil)

உளுந்து பருப்புப்பொடி (Urad dal powder) (Ulunthu paruppu podi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்து, வற்றல்,தேங்காய் துருவல்,பெருங்காயம்,உப்பு எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
- 3
பின்னர் வற்றல் மிளகாய் சேர்த்து நன்கு வறுக்கவும்.
- 4
பின்னர் தேங்காய் துருவல்,பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கலந்து இறக்கவும். நான் டேசிகேடெட் கோகோநட் சேர்த்து செய்துள்ளேன்.
- 5
சூடாரியவுடன் எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்தால் உளுந்து பருப்புப்பொடி தயார்.
- 6
எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.சூடு ஆறியதும் ஓர் ஏர் டைட் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
- 7
இந்த உளுந்து பருப்புப்பொடி மிகவும் சுவையாக இருக்கும்.சாதம், இட்லி, தோசை உடன் சேர்த்து நெய் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)
#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது. Riswana Fazith -
-
உளுந்து பாதாம் பொடி(urad dal almond powder recipe in tamil)
#birthday4கால்சியம் சத்து நிறைந்த பொடி தினமும் காஃபி டீ க்கு பதிலாக இதை கலந்து குடிக்கலாம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது Sudharani // OS KITCHEN -
-
-
எள்ளு பொடி(sesame powder recipe in tamil)
#birthday4சுவை, சத்து மணம் மிகுந்தது. சனி வெங்கடாசலாபதிக்கு விசேஷ நாள். அம்மா எள்ளு பொடி செய்து, எள்ளோரை செய்து வெங்கடாசலாபதிக்கு அம்சை செய்வார்கள் இது எங்கள் குடும்ப வழக்கம். சத்து சுவை மணம் கூடிய எள்ளோரை செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
கொள்ளுப்பொடி (Horse gram powder)
சத்துக்கள் நிறைந்த சுவையான, ஆரோக்கியமான கொள்ளை வைத்து ஒரு கொள்ளுப்பொடி செய்துள்ளேன். சுவையோ சுவை.அனைவரும் செய்து சுவைக்கவும்.#Powder Renukabala -
உளுந்து வடை & தயிர் வடை (urad dal vada & Curd vada)
உளுந்து வடை செய்து, தயிரில் சேர்த்து தாளிப்பு கொடுக்கும் இந்த வடையில் துருவிய கேரட், மல்லி சேர்க்கும்போது மிகவும் சுவை அதிகரிக்கும். #ONEPOT Renukabala -
-
பருப்பு பொடி/tuvar dal (Paruppu podi recipe in tamil)
#Ga4இது மிகவும் எளிதில் செய்யக்கூடிய பொடி ஆகும்.இது ரச சாதத்தில் சேர்த்து சாப்பிட கூடிய பொடி.அதுவும் சூடான ரச சாத்தில் சாப்பிடுவதை விட இரவு நேர உணவில் ஆறிய ரச சாதத்திற்கு மிகவும் சூப்பராக இருக்கும்.அதற்காகவே இதை அரைப்போம்.இது என் அம்மா வீட்டு பக்கம் செய்ய படும் பொடி ஆகும்.என் பால்ய தோழிக்கு மிகவும் பிடிக்கும். அவள் ent டாக்டர் ஆக உள்ளாள்.அதனால் எப்பொழுதும் பிஸியாக இருப்பாள். ஃபோன் மூலமும் அவளை பிடிக்க முடியாது. வாட்ஸ்அப் மெஸேஜிக்கும் பதில் அளிக்க மாட்டாள்.மிக மிக நெருக்கமான தோழி தான். அவளை குற்றம் சொல்லவும் முடியாது.வேலை பளு,குழந்தைகள் படிப்பு,கணவருக்கு உதவுவது( கண் மருத்துவர்) என்று இருப்பாள்.அவளுக்கு இந்த பருப்பு பொடி ரச சாதம் மிகவும் பிடிக்கும்.என் வீட்டில் இளமை காலத்தில் என் அம்மா எங்கள் இருவருக்கும் பொடி போட்டு ரசம் ஊற்றி சாதத்தை பிசைந்து உருட்டி கையில் தருவார்.அதனால் அவளுக்கு இந்த சாதத்தை ஃபோட்டோ எடுத்து உனக்கு நினைவு இருக்கிறதா, நாம் இருவரும் பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பியவுடன் என் அம்மா கையில் சாப்பிடுவோம் என்று மெசேஜ் செய்தேன். மெசேஜ் பார்த்த உடனே மீனா எனக்கு நினைவில் உள்ளது.இதை சாப்பிட வேண்டும் என்று ஆசையாக உள்ளது என்று பதில் அளித்து விட்டு உடனே நேரிலும் அழைத்து பேசி விட்டு மன்னிப்பும் கேட்டாள்.இப்போதெல்லாம் எப்போது ப்ரீயாக இருந்தாலும் கூபிட்டு சிறிது நேரம் பேசுவாள்.அப்படி பட்ட சுவையான பொடி ஆகும்.இது ரசம் சாதம் சேர்த்து சாப்பிட்டால் தான் சுவையாக இருக்கும்.வீட்டில் உள்ள மூன்று பொருட்கள் இருந்தால் போதும்.நான் ரேசன் துவரம் பருப்பில் தான் இதை செய்தேன். Meena Ramesh -
-
கறிவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#Nutrient3#familyகறிவேப்பிலையில் பாஸ்பரஸ், இரும்புச்சத்து ,நார்ச்சத்து ,வைட்டமின் – ஏ, வைட்டமின் – பி, வைட்டமின் – பி2, வைட்டமின் – சி, சுண்ணாம்பு (கால்சியம்) மற்றும் கார்போஹைட்டிரேட், புரதம், தாது உப்புக்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளது . ஆகவே இதை நாம் உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட வேண்டும் . Shyamala Senthil -
* முழு உளுந்து சட்னி*(urad dal chutney recipe in tamil)
#queen2உளுந்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.பித்தத்தை தணிக்கும்.பெண்களின் உடல் வலிமைக்கு பெரிதும் உதவுகின்றது.இது புளிப்பு, காரம், இனிப்புடன் சுவையாக இருக்கும். Jegadhambal N -
-
வெல்ல உளுந்து வடை (Vella ulunthu vadai recipe in tamil)
# deepfryஉளுந்து புரோட்டீனை அதிகம் உள்ள பருப்பு வகையாகும்.மேலும் வெல்லத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.ஆரோக்கியமான உணவு மட்டுமல்லாமல் சுவையான உணவும் கூட.மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு குடுத்தால் பிரசவ காலத்தில் அதிகம் சிரம பட மாட்டார்கள்.பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்த பிறகு அதிகம் உளுந்து உணவு எடுத்து கொள்வது ஆரம்ப காலத்தில் இருந்தே பெண்களின் கர்ப்ப பைக்கு வலு சேர்க்கும்.அனைவருக்கும் நல்லது. Meena Ramesh
More Recipes
கமெண்ட் (3)