டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#nv
டொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
8பேர்
  1. ஒரு கிலோ சிக்கன்
  2. ஐந்து பெரிய வெங்காயம்
  3. கால் கிலோ தக்காளி நன்கு பழுத்தது
  4. 100 கிராம் இஞ்சி பூண்டு சோம்பு சேர்த்து அரைத்த விழுது
  5. ஒரு பச்சை மிளகாய்
  6. 2காய்ந்த மிளகாய்
  7. 3 ஸ்பூன் மல்லி சீரகம் தூள்
  8. அரை ஸ்பூன் மிளகுத் தூள்
  9. 1பிரிஞ்சி இலை
  10. மூன்று ஏலக்காய்
  11. இரண்டு பட்டை
  12. இரண்டு கிராம்பு
  13. தேவையான அளவுஉப்பு
  14. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  15. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    தேவையான பொருள்கள்

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் நாம் பெரிதாக வெட்டிவைத்துள்ள வெங்காயத்தை போட்டு விழுதாக தனியே அரைத்துக் கொள்ளவும் அதன்பின் நாம் வெட்டி வைத்துள்ள தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் விட்டு அதில் பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும் பின் அதில் நாம் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்க்கவும் பின் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதினை சேர்க்கவும்

  4. 4

    தக்காளி வெங்காயம் நன்றாக பச்சை வாசனை போன விடும் நாம் நன்றாக கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்க்கவும் சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக கிளறி பின் இஞ்சி பூண்டு சோம்பு விழுது நெய் சேர்த்து நன்றாக கிளறவும்

  5. 5

    பின் மிளகாய் தூள் மல்லி சீரகம் மிளகு சேர்த்து அரைத்த மசால் பொடியை போடவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

  6. 6

    பின் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும் மல்லித்தழையை தூவி இறக்கவும் இப்போது காரசாரமான சுவையான டொமேட்டோ சிக்கன் கிரேவி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
அன்று

Similar Recipes