வெஜிடபிள் தோசை ரோல்(Vegetable dosai roll recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

வெஜிடபிள் தோசை ரோல்(Vegetable dosai roll recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு பேர்
  1. ஒரு கப்பச்சைப் பட்டாணி
  2. ஒரு கப்காலிபிளவர் வேகவைத்து பொடியாக நறுக்கி
  3. 1உருளைக்கிழங்கு
  4. 1கேரட்
  5. சிறிதளவுஇஞ்சி பூண்டு பேஸ்ட்
  6. 1வெங்காயம்
  7. 1தக்காளி
  8. சிறிய ஸ்பூன்சாம்பார் பொடி
  9. ஒரு சிறிய ஸ்பூன் தனியா தூள்
  10. சிறிதளவு கரம் மசாலா
  11. தேவையான அளவு உப்பு
  12. ஒரு சிட்டிகைசர்க்கரை
  13. சிறிதளவுசோம்பு,
  14. சிறிதளவுபொடியாக நறுக்கிய மல்லி இலை
  15. தேவையான அளவுதோசை மாவு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    பச்சைப் பட்டாணி கேரட்.உருளைக்கிழங்கு நறுக்கி,குக்கரில் சிறிதளவு நீர் விட்டு உப்பு சேர்த்து 2 விசில் விடவும். காலிஃப்ளவரை சுடுநீரில் போட்டு எடுத்து பொடியாக நறுக்கவும். வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கவும்.ஒரு வாணலில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பு சிறிதளவு தாளித்து வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

  2. 2

    பச்சை வாசனை போனதும் வேக வைத்து மசித்த,காய்கறிகள் நறுக்கிய காலிஃப்ளவர் சேர்த்து சாம்பார் தூள் தனியா தூள் கரம் மசாலா தூள் சேர்த்து ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து நன்கு சுருள வதக்கவும் பொடியாக அறிந்த மல்லி இலை சேர்க்கவும்.காய்கறி மசாலா தயார்.

  3. 3

    தோசைக்கல்லில் மாவை ஊற்றி ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து முறுகலாக தோசை சுட்டு காய்கறி மசாலாவை ஓரத்தில் வைத்து ரோல் செய்து எடுக்கவும்.சுவையான வெஜிடபிள் தோசை ரோல் தயார். இந்த மசாலாவை சப்பாத்தியில் வைத்து சுருட்டி சப்பாத்தி ரோல் செய்யலாம். மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Soundari Rathinavel
அன்று

Similar Recipes