கிரில்டு ப்ரோக்கோலி பொட்டேட்டோ மசாலா (Grilled broccoli potato masala recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

#ve

பிரக்கோலி மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை சாப்பிட்டு வந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கன்சர் கிருமிகளை அழிக்கும் சத்து இதில் உள்ளது. இதனை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 250 கிராம் பிரக்கோலி
  2. 1உருளைக்கிழங்கு
  3. 1/4 கப் கெட்டி தயிர்
  4. 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  5. 1 தேக்கரண்டி சாட் மசாலா
  6. 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  7. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  8. 1 தேக்கரண்டி உப்பு
  9. 1 தேக்கரண்டி கசூரி மேத்தி
  10. 1மேசைக் கரண்டி கடலை மாவு
  11. 1மேசைக்கரண்டி கடுகு எண்ணெய்
  12. மசாலா அரைக்க தேவையானவை:
  13. 2 பெரிய வெங்காயம்
  14. 2 துண்டு இஞ்சி
  15. 1 முழு பூண்டு
  16. 3 தக்காளி
  17. 1/4 கப் முந்திரி
  18. கிரில்டு மசாலா தயாரிக்க:
  19. 4 மேஜைக்கரண்டி எண்ணெய்
  20. 1/2 தேக்கரண்டி சீரகம்
  21. 1/4 தேக்கரண்டி துருவிய இஞ்சி
  22. 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
  23. 1 மேஜைக்கரண்டி மல்லித் தூள்
  24. 1 தேக்கரண்டி சாட் மசாலா
  25. 1 தேக்கரண்டி சீரகத்தூள்
  26. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  27. 1/4 தேக்கரண்டி கரம் மசாலா
  28. 1/2 கப் தண்ணீர்
  29. 1/4 கப் ஃப்ரெஷ் கிரீம்
  30. 1 மேஜைக்கரண்டி உப்பு
  31. நறுக்கிய கொத்தமல்லி இலைகள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பிரக்கோலி வெட்டி சுத்தம் செய்து சுடு தண்ணீரில் சேர்த்து உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். உடனே ஐஸ் கட்டிகள் கலந்த தண்ணீரில் மாற்றவும்.

  2. 2

    இவ்வாறு செய்வதனால் ப்ரோக்கோலி நிறம் மாறாமல் சுவை மாறாமல் இருக்கும். இதனை தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சாட் மசாலா, கசூரி மேத்தி, உப்பு, கடுகு எண்ணெய், கடலை மாவு, எல்லாம் சேர்த்து கலந்து விடவும்.

  3. 3
  4. 4

    இதில் ப்ராக்கோலி மற்றும் நீளமாக வெட்டிய உருளைக்கிழங்கை சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன்பின் கிரில் தவாவில் ப்ராக்கோலியை க்ரில் செய்து எடுக்கவும்.

  5. 5

    பின் உருளைக்கிழங்கையும் தொழில் செய்யவும் இதனை தனியாக தட்டில் வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காயத்தை வெட்டி சேர்த்து வதக்கவும்.

  6. 6

    இதில் இஞ்சி-பூண்டு முந்திரியை சேர்த்து வதக்கவும். தக்காளியை வெட்டி அல்லது அரைத்து சேர்த்து வதக்கிக் கொள்ளவும். நன்கு வதங்கியதும் ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

  7. 7

    பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம், துருவிய இஞ்சி சேர்க்கவும். பிறகு குறிப்பிட்டுள்ள மசாலாக்களை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

  8. 8

    அரைத்த வெங்காய தக்காளி விழுதை சேர்க்கவும். இரு நிமிடங்கள் வதங்கியபின் கிரில் செய்த காய்கறிகளை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.

  9. 9

    தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் 10 நிமிடம் வேக விடவும். அதன்பின் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து கலந்து விடவும்.

  10. 10

    இறுதியில் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.இதனை சப்பாத்தி புலாவ் வகைகள் உடன் பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes