உருளைக்கிழங்கு பால் சட்னி (urulai kilangu Paal Chutney Recipe in Tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

  உருளைக்கிழங்கு பால் சட்னி (urulai kilangu Paal Chutney Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10  நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1வேகவைத்த உருளைக்கிழங்கு
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1பச்சைமிளகாய்
  4. கால் டீஸ்பூன்கடுகு
  5. கால் டீஸ்பூன்உளுந்து
  6. சிறிதளவுபெருங்காயம்
  7. 1 டீஸ்பூன்கடலை எண்ணெய்
  8. சிறிதுகருவேப்பிலை
  9. தேவைக்கேற்பஉப்பு
  10. கால் டம்ளர்பால்
  11. 1 டீஸ்பூன்அரிசி மாவு

சமையல் குறிப்புகள்

10  நிமிடம்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை மசித்து கொள்ளவும்

  2. 2

    வெங்காயம் பச்சைமிளகாய் பொடியாக நறுக்கி கொள்ளவும்

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து பெருங்காயம் கருவேப்பிலை தாளிக்கவும்

  4. 4

    பிறகு அதில் வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்

  5. 5

    பிறகு.அதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

  6. 6

    தண்ணீர் கொதித்தவுடன் உருளைக்கிழங்கு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்

  7. 7

    பாலில் அரிசி மாவு சேர்த்து கரைத்து உருளைக்கிழங்கில் சேர்க்கவும்

  8. 8

    ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்

  9. 9

    இட்லி தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes