🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 4வேக வைத்த முட்டை
  2. 2வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 1 மேஜைக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  5. 1 தே.கமிளகாய் தூள்
  6. 1/4 தே.கமஞ்சள் தூள்
  7. 2பிரிஞ்சி இலை
  8. 1பட்டை
  9. 3கிராம்பு
  10. 1நட்சத்திர சோம்பு
  11. 1ஏலக்காய்
  12. சிறிதளவுகறிவேப்பிலை
  13. தேவையான அளவுஉப்பு
  14. அரைக்க தேவையான பொருட்கள்
  15. 2 மேஜைக்கரண்டிமல்லி
  16. 1 தே.கசோம்பு
  17. 1 தே.கசீரகம்
  18. 1 தே.கமிளகு
  19. 1நட்சத்திர சோம்பு
  20. 1ஏலக்காய்
  21. 4கிராம்பு
  22. 4காய்ந்த மிளகாய்
  23. சிறிய துண்டுபட்டை
  24. 1/4 கப்துருவிய தேங்காய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1
  2. 2

    வாணலியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை குறைவான தீயில் வைத்து ஒவ்வொன்றாக சேர்த்து சிவக்க வறுக்கவும். இறுதியில் தேங்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். நன்றாக ஆறவைத்து கலவை இயந்திரத்தில் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

  3. 3

    பிறகு வேக வைத்த முட்டையை கத்தி வைத்து படத்தில் காட்டியவாறு கீறிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய், மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள், வேக வைத்த முட்டை சேர்த்து இரண்டு நிமிடம் பொரிக்கவும்.

  4. 4
  5. 5

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.

  6. 6

    அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து கொள்ளவும். பிறகு அரைத்த மசாலா கலவை, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

  7. 7

    இந்த நிலையில் உப்பின் அளவை சரி பார்த்துக்கொள்ளவும். ஐந்து நிமிடங்கள் கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் வேகவைத்து பொரித்த முட்டைகளை சேர்த்துக் கொள்ளவும். மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்கவைத்து அடுப்பை அணைத்து கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

  8. 8
  9. 9

    சுவையான செட்டிநாடு முட்டை குழம்பு தயார். 🥚🍲🥚🍲🥚🍲🥚

  10. 10

    சாதம்,சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் பொருந்தும் கிரேவி.

  11. 11
எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes