அப்பளக்குழம்பு (Appalam kulambu recipe in tamil)

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
Pandhalkudi

#GA4
#week23
Pappad
வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லை என்றால் விரைவில் சமைக்க கூடிய அப்பளக்குழம்பு.

அப்பளக்குழம்பு (Appalam kulambu recipe in tamil)

#GA4
#week23
Pappad
வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லை என்றால் விரைவில் சமைக்க கூடிய அப்பளக்குழம்பு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 பாக்கெட் மோதிர அப்பளம்
  2. வெங்காயம் சிறிதளவு
  3. 3 தக்காளி
  4. 1/2 கப் கடலைப்பருப்பு
  5. சிறிதளவுஎண்ணெய்
  6. தேவையான அளவுஉப்பு
  7. தேங்காய் விழுது
  8. 4 ஸ்பூன் மசாலா பொடி
  9. சிறிதளவுகடுகு,உளுந்தப்பருப்பு
  10. 2 பச்சை மிளகாய்
  11. சிறிதளவுகருவேப்பில்லை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தப்பருப்பு சேர்க்கவும்.

  2. 2

    பின்பு,வெங்காயம்,கருவேப்பில்லை சேர்க்கவும்.வெங்காயம் நன்றாக வதக்கவும்.

  3. 3

    தக்காளி,சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடனதும் அப்பளத்தை பொரிக்கவும்.

  5. 5

    தக்காளி,வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு தேங்காய் அரைத்து சேர்க்கவும்.காரத்திற்கு ஏற்ப குழம்பு மசாலா தூள் சேர்க்கவும்.நன்றாக கொதிக்க விடவும்.பின்பு,கடலைப்பருப்பை வேக வைத்து சேர்க்கவும்.

  6. 6

    குழம்பு நன்றாக கொதித்த பின்னர் பொரித்து வைத்த அப்பளத்தை சேர்க்கவும்.

  7. 7

    சிறிதளவு புளி கரைத்து சேர்க்கவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து,குழம்பு இறக்கும் போது நல்லெண்ணெய் சிறிதளவு சேர்த்து இரக்கவும்.

  8. 8

    சுவையான அப்பளக்குழம்பு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
அன்று
Pandhalkudi

Similar Recipes