மேகி க்ரிஸ்பி ஃபிங்கர்ஸ்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#MaggiMagicInMinutes #Collab மேகி கிரிஸ்பி ஃபிங்கர்ஸ். மிகவும் ருசியாக இருந்தது. குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். இதில் பெருங்காயத் தூள் சேர்த்து இருப்பதால் உருளைக்கிழங்கின்வாய்வு இருக்காது. மிளகுத் தூள் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். கண்டிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் செய்து பாருங்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
10 பரிமாறுவது
  1. 1பாக்கெட் மேகி நூடுல்ஸ்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 2உருளைக்கிழங்கு
  4. 2பச்சை மிளகாய்
  5. 1\4ஸ்பூன் சாட் மசாலா
  6. 1\4ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1\4ஸ்பூன் பெருங்காயத் தூள்
  8. 2பின்ச் மிளகுத்தூள்
  9. 2டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  10. 3டேபிள்ஸ்பூன் மைதா மாவு
  11. தேவையானஅளவு உப்பு
  12. எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி குக்கரில் தேவையான அளவு தண்ணீர் விட்டு 3 விசில் விட்டு எடுத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    உருளைக்கிழங்கை ஆறியதும் தோலை நீக்கிவிட்டு நன்கு மசித்துக் கொள்ளவும் அதனுடன் மிளகாய்த்தூள், சாட் மசாலா சேர்க்கவும்

  3. 3

    பிறகு மிளகுத்தூள், பெருங்காயத்தூள், அரிசி மாவு சேர்க்கவும்

  4. 4

    பிறகு பொடியாக அரிந்த பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்

  5. 5

    இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு ஒரு சேர பிசைந்து கொள்ளவும்

  6. 6

    ஒரு சிறிய குழி கரண்டியில் எடுத்துக் கொண்டு அதில் ஒரு கரண்டி எடுக்கவும். அதாவது ஃபிங்கர் செய்வதற்கு தேவையான அளவு எடுக்கவும் (இதுதான் சரியான அளவு. ஏனெனில் ஒரே குழி கரண்டியில் எடுக்கும் பொழுது ஃபிங்கர்ஸ் அனைத்தும் ஒரே அளவாக வரும்)

  7. 7

    இதனை உள்ளங்கையில் வைத்து உருட்டி பிறகு நீளமான அதாவது ஃபிங்கர்ஸ் அளவாக உருட்டிக் கொள்ளவும் (அதாவது சிலிண்டர் ஷேப்பில்)

  8. 8

    மேகி பாக்கெட்டை பிரிப்பதற்கு முன்பாக பூரி உருட்டும் கட்டையால் நன்கு அடித்து அதாவது தூளாக செய்து எடுத்துக் கொள்ளவும்

  9. 9

    இதனை கவரைப் பிரித்து தூள் செய்யப்பட்ட மேகியை ஒரு ப்ளேட்டில் எடுத்துக் கொள்ளவும் (அதனுள் உள்ள மசாலா பவுடரை தனியே எடுத்து வைக்கவும்)

  10. 10

    ஒரு மிக்ஸிங் பௌலில் மைதா மாவை எடுத்துக்கொண்டு அதனுடன் மேகி பாக்கெட்டினுள் உள்ள ஸ்பைசஸ் (அதாவது மசாலா பவுடர்) பிரித்து அதனுடன் சேர்க்கவும்

  11. 11

    இதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி திக்காக கரைத்துக் கொள்ளவும். (அதாவது செமி சாலிட் ஆக) ரொம்ப நீர்க்க இல்லாமலும் ரொம்ப கெட்டியாக இல்லாமலும் கரைத்துக் கொள்ளவும்

  12. 12

    பிறகு உருட்டி வைத்துள்ள ஃபிங்கர்ஸை ஒவ்வொரு துண்டாக எடுத்து மைதா கரைசலில் முக்கி எடுத்து, பிளேட்டில் உள்ள நூடுல்ஸில் புரட்டி எடுக்கவும்

  13. 13

    இதேபோல் அனைத்தையும் புரட்டி ஒரு பிளேட்டில் எடுக்கவும். இதனை ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் 15 நிமிடங்கள் வைத்து பிறகு மீண்டும் வெளியே எடுக்கவும்

  14. 14

    ஒரு நான் ஸ்டிக் கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் அடுப்பை குறைவான தணலில் வைத்து ஃபிங்கர்ஸ் களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  15. 15

    அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும். அப்போதுதான் நன்கு கிரிஸ்பியாக வரும் அதிக தணலில் வைத்தால் வெளிப்புறம் அதிகம் சிவந்து விடும். அனைத்தையும் பொரித்து எடுத்து டொமேட்டோ சாஸ் உடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes