முழு கோழி ரோஸ்ட்

சுகன்யா சுதாகர்
சுகன்யா சுதாகர் @sugangautam25

#Tv
மாஸ்டர் செஃப் ஷோவில் பார்த்து முயற்சித்த ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி 30 நிமி
4 நபர்
  1. ஒரு முழு கோழி
  2. 100 கிராம் வெண்ணெய்
  3. 3 ஸ்பூன் தேன்
  4. 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  5. ஒரு முழு பூண்டு விழுது
  6. மிளகு தூள் ஒரு ஸ்பூன்
  7. மிளகாய் தூள் 3 ஸ்பூன்
  8. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  9. சீரகம் தூள் ஒரு ஸ்பூன்
  10. உப்பு
  11. கொத்தமல்லி தழை
  12. ஒரு வெங்காயம்
  13. 2உருளைக்கிழங்கு
  14. இரண்டு பூண்டு
  15. ஒரு எலுமிச்சை பழம்

சமையல் குறிப்புகள்

1 மணி 30 நிமி
  1. 1

    ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், எலுமிச்சை சாறு, தேன், உப்பு, மிளகு தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், சீரகம் தூள், கொத்தமல்லி, பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறி வைக்கவும்

  2. 2

    ஒரு பேக்கிங் ட்ரேயில் வெங்காயம் உருளைகிழங்கு பூண்டு பாதியாக வெட்டி அடியில் வைக்கவும் பின் அதன் மேல் முழு கோழி வைத்து நாம் செய்த மசாலா கலவையை அதன் தோல் பகுதியனுள் வைத்து அனைத்து பக்கமும் தேய்த்து விடவும்.

  3. 3

    பின் கோழியனுள் பாதி பூண்டு, எலுமிச்சை பழம் வைத்து கோழியின் கால்களை ஒரு நூல் வைத்து கட்டவும். கோழியின் ரெக்கைகளையும் சேர்த்து கட்டி விடவும். 180 டிகிறீயில் ஓவனை 10 நிமிடம் சூடு படுத்தவும் பின் ஒரு மணி நேரம் மணி வைத்து ட்ரேயை உள்ளே வைக்கவும்

  4. 4

    முதல் 30 நிமிடம் ஓவனை திறக்க வேண்டாம். பின் வெளியே எடுத்து ட்ரேயில் உள்ள சிக்கன் தண்ணீரை ஒரு ஸ்பூன் வைத்து எடுத்து சிக்கன் மீது ஊற்றவும். இப்படி செய்வதால் சிக்கன் மிகவும் சுவையாக இருக்கும் மற்றும் பஞ்சு போன்று வேகும். ஒவ்வொரு 10 நிமிடத்திற்கு ஒரு முறை இவ்வாறு செய்யவும்.

  5. 5

    ஒரு மணி நேரம் பின் சிக்கன் எடுத்து வெந்துவிட்டதா என்று பார்த்துகொள்ளவும். இல்லையெனில் 10 நிமிடம் கூட வைக்கவும்.

  6. 6

    மிகவும் சுவையான முழு கோழி ரோஸ்ட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

சுகன்யா சுதாகர்
அன்று

Similar Recipes