"மதிய உணவு சாதம்,முருங்கைக்காய் பருப்பு சாம்பார்".. - (Rice & murungai kai parupu sambar recipe)

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126

"மதிய உணவு சாதம்,முருங்கைக்காய் பருப்பு சாம்பார்".. - (Rice & murungai kai parupu sambar recipe)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
  2. 2கப்(1/2 படி)புளுங்கல் அரிசி-
  3. 4கப்தண்ணீர்-.பாத்திரத்தில் சாதம் வடிக்க தேவைக்கேற்ப சேர்க்கவும்
  4. தேவையான அளவுகல் உப்பு-
  5. முருங்கைக்காய் பருப்பு சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
  6. 200கிராம்துவரம் பருப்பு
  7. 1டீஸ்பூன்சன்பிளவர் ஆயில்-
  8. தேவையான அளவுதண்ணீர்-
  9. 1மீடியம் அளவுவெங்காயம்-
  10. 2தக்காளி பழம்-
  11. தேவையான அளவுகல் உப்பு-
  12. 4சிறியகத்திரிக்காய்-
  13. 4வெள்ளை கத்திரிக்காய்-
  14. 1பெரியதுமுள்ளங்கி
  15. 1டீஸ்பூன்மஞ்சள் தூள்-
  16. 1டீஸ்பூன்சீரகம் தூள்-
  17. 2முருங்கைக்காய்-
  18. 1 மீடியம் அளவுமாங்காய்-
  19. 1எலுமிச்சை பழம்-
  20. தாளிப்புக்கு தேவையான பொருட்கள்:
  21. 3டீஸ்பூன்சன்பிளவர் ஆயில்-
  22. 1மீடியம் அளவுவெங்காயம்-
  23. 1டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்-
  24. 2கொத்துகருவேப்பிலை-
  25. சிறிதளவுகரிவிடகம்-
  26. 1டீஸ்பூன்மிளகாய் தூள்-
  27. 1டீஸ்பூன்சாம்பார் பொடி-

சமையல் குறிப்புகள்

  1. 1

    2கப் புளுங்கல் அரிசியை 3முறை நன்றாக கழுவி 4கப் தண்ணீர் அல்லது (தேவையான அளவு) சேர்த்து 10நிமிடம் ஊற வைக்கவும்.
    பின் கேஸ் அடுப்பில் வைத்து அரிசியை வேக வைக்கவும்.

  2. 2

    சாதம் வெந்தவுடன் மூடி வைத்து 2நிமிடம் கேஸ் அடுப்பில் ஏற்றி இரக்கவும்.சாதம் ரெடி....

  3. 3

    முருங்கைக்காய் பருப்பு சாம்பார்க்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
    200கிராம் துவரம் பருப்பை நன்றாக கழுவி 15நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
    1வெங்காயம்&2தக்காளியை பொடியாக நறுக்கவும்.
    முள்ளங்கியை தோல் நீக்கி உருண்டையாக அரியவும்.

    4கத்திரிக்காய்&1பெரிய கத்திரிக்காயை இரண்டாக வெட்டி கியூப் வடிவத்தில் வெட்டவும்.கத்திரிக்காய்க்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வைக்கவும்.கத்திரிக்காய் கருக்காமல் இருக்கும்...

    மசாலா பொருட்கள்,தண்ணீர் தேவையான அளவு வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    ஊற வைத்த 200கிராம் பருப்பை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 1டீஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு,1டீஸ்பூன் சன்பிளவர் ஆயில் சேர்த்து கலக்கி டயர்,வெயிட் போட்டு 4 அல்லது 5 விசில் விட வேண்டும்.

  5. 5

    வேக வைத்த பருப்பை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.
    பின் குக்கரில்நறுக்கி வைத்த 1வெங்காயம்,2தக்காளி,5கத்திரிக்காய்கள்,2முள்ளங்கி,1டீஸ்பூன் சீரகம் தூள்,தேவையான அளவு கல் உப்பு&தண்ணீர் சேர்த்து டயர்,வெயிட் போட்டு மூடி வேக வைக்க 2விசில் விட்டு இரக்கவும்.

  6. 6

    பின் பாத்திரத்தில் வேக வைத்திருந்த பருப்பு,காய்கறிகளோடு 2முருங்கைக்காயை போட்டு வேக வைக்கவும்,1மீடியம் அளவு மாங்காயை வெட்டிக் கொள்ளவும்,1எலுமிச்சைப் பழம் சாறு பிளிந்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

  7. 7
  8. 8
எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jenees Arshad
Jenees Arshad @NJA89912126
அன்று

Similar Recipes