எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
5நபர்
  1. வெங்காயம் 5
  2. வெள்ளை கொண்டைக்கடலை அரை கிலோ
  3. தக்காளி 5
  4. பச்சை மிளகாய்-3
  5. பட்டை பூ சோம்பு வெந்தயம் தாளிக்க
  6. மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  7. 3தக்காளி அரைத்த விழுது
  8. 3 வெங்காயம் அரைத்த விழுது
  9. இஞ்சி பூண்டு விழுது அரை டீஸ்பூன்
  10. தேங்காய் சோம்பு மிளகுபூண்டு அரைத்தவிழுது ஒரு கப்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    சுண்டக்கடலை எட்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் 2வெங்காயம் பச்சை மிளகாய் 2 தக்காளியை மட்டும் நறுக்கி வைத்து மீதமுள்ள தக்காளியை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    தேங்காய் சோம்பு மிளகு பூண்டு போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும் மீதமுள்ள 3 வெங்காயத்தையும் அரைத்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை சோம்பு வெந்தயம் தாளித்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சைமிளகாய் வதக்கி நன்றாக வதக்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து

  4. 4

    அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் தக்காளி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கி

  5. 5

    அதில் மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன் சேர்த்து பாதி சுண்டக்கடலை ஒன்றிரண்டாக மிக்ஸியில் உடைத்து அதையும் சேர்த்து நன்றாக வதக்கி மீதமுள்ள சுண்டக்கடலை சேர்த்து

  6. 6

    பிறகு தேங்காய் பேஸ்ட் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவேண்டும்

  7. 7

    பிறகு நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் சுவையான பூரி சென்னா மசாலா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Meena
Meena Meena @cook_23313031
அன்று

Similar Recipes