கருணைக்கிழங்கு புளிக்குழம்பு

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#ownrecipe
மூலம் வியாதிக்கு சிறந்த மருந்து கருணைக் கிழங்கு

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 3கருணைக்கிழங்கு
  2. 20 பல் சின்ன வெங்காயம்
  3. 10 பல் பூண்டு
  4. 2தக்காளி
  5. 1 ஸ்பூன் வெந்தயம், பெருங்காயத்தூள்
  6. நெல்லிக்காய் அளவுபுளி
  7. 1 ஸ்பூன் மஞ்சள்த்தூள்,
  8. தேவைக்கேற்ப உப்பு, எண்ணெய், தண்ணீர்
  9. 3 ஸ்பூன்வீட்டில் அரைத்த குழம்பு மசால்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும் புளியை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்

  2. 2

    கருணைக்கிழங்கை வேக வைத்து தோலை உறித்து பின் வெட்டி வைத்து கொள்ளவும்

  3. 3

    ஒருக்கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெந்தயம் மற்றும் பெருங்காயத்தூள்ச் சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    பின் வெங்காயம், பூண்டு, மற்றும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்

  5. 5

    வதங்கியதும் மஞ்சள் மற்றும் மசால்த்தூள்ச் சேர்த்துக் கொள்ளவும்

  6. 6

    பிறகு தண்ணீர்ச் சேர்த்து வேக விடவும்

  7. 7

    பிறகு உப்புச் சேர்த்துக் கொள்ளவும் கொதிக்க விடவும்

  8. 8

    சிறிது கொதிப்பு வந்தவுடன் வேக வைத்த கிழக்கை சேர்த்து கிளரவும்

  9. 9

    குழம்பில் மசால் மற்றும் கிழங்கு அரைகுறையாக மசியும் வரைப் பொறுத்திருக்கவும் (கிழங்கு மசிந்தால் சுவை அதிகரிக்கும்)

  10. 10

    பின் ஊற வைத்து கரைத்த புளியைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்

  11. 11

    புளி ஊற்றி ஒருக் கொதியில் இறக்கி பரிமாறவும் சுவையான கருணைக்கிழங்கு புளிக் குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes