பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#combo3 அரிசி உடையாமல், உதிரி உதிரியான, ருசியான பாஸ்மதி மட்டன் பிரியாணி செய்முறை. இதற்கு மட்டன் எலும்பு தாளிச்சா சேர்த்து சாப்பிட்டால் ருசி அபாரமாக இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

60நிமிடங்கள்
10பரிமாறுவது
  1. 1கி பாஸ்மதி அரிசி
  2. 1கி மட்டன்
  3. 4பெரிய வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 4பச்சை மிளகாய்
  6. 2கொத்து கறிவேப்பிலை
  7. கைப்பிடி கொத்தமல்லி
  8. 3கைப்பிடி புதினா
  9. 1\2கப்+1ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது
  10. 1\2கப் கெட்டி தயிர்
  11. 1எலுமிச்சை பழம்
  12. 2டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
  13. 2 டேபிள் ஸ்பூன்பிரியாணி பொடி
  14. 1\4+1\2ஸ்பூன் மிளகாய் தூள்
  15. 1\4+1\2ஸ்பூன் மல்லித்தூள்
  16. 1\4ஸ்பூன் மஞ்சள் தூள்
  17. 1\2ஸ்பூன் சோம்புத்தூள்
  18. 1\2ஸ்பூன் சீரகத்தூள்
  19. 3துண்டு பட்டை
  20. 3அன்னாசி பூ
  21. 2ஜாதிபத்ரி
  22. 2நட்சத்ர பூ
  23. 3பிரிஞ்சி இலை
  24. 4ஏலக்காய்
  25. 5கிராம்பு
  26. 1\4கப் கடலை எண்ணெய்
  27. 1\4கப் நெய்
  28. 1பங்குக்கு 2 வீதம் தண்ணீர்
  29. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

60நிமிடங்கள்
  1. 1

    மட்டனை துண்டுகளாக நறுக்கி கழுவி குக்கரில் சேர்த்து அதனுடன் 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1\4ஸ்பூன், மஞ்சள்தூள், 1\2ஸ்பூன் சோம்புத் தூள், 1\2ஸ்பூன் சீரகத்தூள், 1\2ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு எடுக்கவும்

  2. 2

    குக்கர் விசில் அடங்கியதும் அதனை திறந்து மட்டன் தனியே, வேக வைத்த தண்ணீரை தனியே எடுத்துக்கொள்ளவும் (ஏனென்றால் இந்த தண்ணீரையே பிரியாணிக்கு அளந்து ஊற்றுவதற்கு வைக்கவும்)

  3. 3

    அடி கனமான, அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 1\4கப் கடலை எண்ணெய், 1\4கப் நெய் சேர்க்கவும். பட்டை, இலை, அன்னாசிப் பூ, ஜாதி பத்திரி, ஏலக்காய், கிராம்பு, நட்சத்திர பூ இவற்றை சேர்த்து பொரியவிடவும்

  4. 4

    பிறகு இரண்டாகக் கீறிய பச்சை மிளகாயையும் நீள வாக்கில் கீறி பெரிய வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கி விடவும்

  5. 5

    பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மசிய வதக்கி விடவும்

  6. 6

    கருவேப்பிலை சேர்த்து வதக்கி பிறகு புதினா, கொத்தமல்லி இவற்றை பொடியாக நறுக்கி அதனையும் சேர்த்து நன்கு வதக்கவும்

  7. 7

    இப்போது 1\2கப் இஞ்சி பூண்டு விழுது, வேக வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் 1\2ஸ்பூன் மிளகாய்த்தூள், 1\2ஸ்பூன் மல்லித் தூள், 2டேபிஸ்பூன் கரம் மசாலா தூள் இவற்றையும் சேர்த்து நன்கு வதக்கி விடவும்

  8. 8

    பிறகு 1\2 கப் கெட்டித் தயிர், 1 எலுமிச்சை பழம் விதை நீக்கி பிழிந்து விடவும்

  9. 9

    பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி தண்ணீர் வடித்து சேர்க்கவும்

  10. 10

    இப்போது பிரியாணி பொடி 2டேபிள்ஸ்பூன் சேர்க்கவும்

  11. 11

    இப்போது மட்டன் வேக வைத்த தண்ணீரை அளந்து அதாவது ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் வீதம் (மட்டன் வேக வைத்த தண்ணீருடன் சாதா தண்ணீரையும் கலந்து)ஊற்றவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். ஒரு ஐந்து நிமிடங்கள் வைத்திருக்கவும். இப்போது லேசாக கொதி வந்து அரிசி வேக ஆரம்பிக்கும். கரண்டி போட்டு கிளற கூடாது

  12. 12

    இப்போது தண்ணீர் வற்றி அரிசி ஓரளவு வெந்ததும் அதன் கீழே தோசைக்கல்லை வைத்து அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும். மேல் ஒரு பெரிய நியூஸ் பேப்பரை வைத்து மூடி அதற்கு மேல் ஒரு தட்டை வைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து இதற்குமேல் (தம்)வைக்கவும்

  13. 13

    தோசைக் கல்லிலேயே குறைந்த தணலில் ஒரு பத்து நிமிடங்கள் வைத்திருந்து அடுப்பை அணைக்கவும். ருசியான பாஸ்மதி மட்டன் பிரியாணி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

Top Search in

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes