தேவையான பொருட்கள்

  1. 2உருளை கிழங்கு
  2. கால்பாகம்காலிபிளவர் பூ
  3. தேவையான அளவுஉப்பு
  4. 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 தனியா தூள்
  5. 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1ஸ்புன் சீரகம் தூள்
  6. 2பச்சை மிளகாய், பல் பூண்டு
  7. 2பச்சை மிளகாய், சிறிது கொத்தமல்லி தழை
  8. 1 குடமிளகாய்
  9. 1துண்டு இஞ்சி

சமையல் குறிப்புகள்

  1. 1

    பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி,பூண்டு, குடமிளகாய் பொடியாகநறுக்கவும். காலிபிளவர் சுடுதண்ணீரில் போட்டு எடுத்து கொள்ளுங்கள். உருளைகிழங்கு நறுக்கி வேக வைக்கவும்.

  2. 2

    ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாகநறுக்கிய எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் போடவும். நன்றாக வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    வேக வைத்து உள்ள உருளைக்கிழங்கு, காலிபிளவர் போட்டு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். கெட்டியான பதம் பார்த்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சிறிது நெய் ஊற்றி பரிமாறவும்.

  4. 4

    சப்பாத்தி, பட்டர் நாண் சூப்பர் சைடீஸ். ஆலு கோபி மாசலா.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sundari Mani
Sundari Mani @cook_22634314
அன்று

Similar Recipes