பஞ்சகல்யாண் பர்ஃபி

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#walnuttwists
பஞ்ச கவ்யமானது உடலின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதே போல் , "பஞ்ச கல்யாண் பர்ஃபியும்,"உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வால்நட்,வேர்க்கடலை,பொட்டுக்கடலை, பாதாம் ,முந்திரி போன்ற ஐந்து வகையான பொருட்களை சேர்த்து செய்வதால் இதற்கு, பஞ்ச கல்யாண் பர்ஃபி என்று பெயர் வைத்தேன். சர்க்கரையை விட நாட்டுச் சர்க்கரைமை அதிகம் சேர்த்து உள்ளேன்.

பஞ்சகல்யாண் பர்ஃபி

#walnuttwists
பஞ்ச கவ்யமானது உடலின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதே போல் , "பஞ்ச கல்யாண் பர்ஃபியும்,"உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வால்நட்,வேர்க்கடலை,பொட்டுக்கடலை, பாதாம் ,முந்திரி போன்ற ஐந்து வகையான பொருட்களை சேர்த்து செய்வதால் இதற்கு, பஞ்ச கல்யாண் பர்ஃபி என்று பெயர் வைத்தேன். சர்க்கரையை விட நாட்டுச் சர்க்கரைமை அதிகம் சேர்த்து உள்ளேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3/4மணி
6பேர்
  1. 1கப்வால் நட்
  2. 1கப் பாதாம்
  3. 1கப் வேர்க்கடலை
  4. 1கப்முந்திரி
  5. 1கப்பொட்டுக் கடலை
  6. 2கப்நாட்டுச் சர்க்கரை
  7. 1கப்சர்க்கரை
  8. 5ஏலக்காய்
  9. 1 சிட்டிகைஉப்பு
  10. 2டேபிள் ஸ்பூன்நெய்
  11. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

3/4மணி
  1. 1

    வெறும் கடாயில் வால் நட்டை வறுக்கவும்.

  2. 2

    வறுத்ததை ஒரு அகலமான பாத்திரத்தில் போடவும். பிறகு பாதாமை வறுத்து சேர்க்கவும்.வேர்க்கடலையையும் வறுத்து சேர்க்கவும்.

  3. 3

    முந்திரியையும் வறுத்து சேர்க்கவும்.

  4. 4

    பொட்டுக் கடலையையும் வறுத்து சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    ஏலக்காயை வறுத்து சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றாக கலந்து ஆறினதும் மிக்ஸியில் போடவும்.

  6. 6

    பிறகு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் நாட்டுச் சர்க்கரை,சர்க்கரை இரண்டையும் போடவும்.

  7. 7

    பிறகு தண்ணீர் சிறிது விட்டு கரைந்ததும் வடிகட்டி பாகு காய்ச்சவும். ஒரு கம்பி பதம் வந்ததும் அடுப்பை சிறிய தீயில் வைத்து அரைத்த மாவை சிறிது சிறிதாக போட்டு கட்டி தட்டாமல் கிளறவும்.

  8. 8

    சிறிது நெய் விட்டு ஒட்டாமல் வந்ததும் இறக்கி விடவும். தட்டில் நெய்யை தடவிக் கொள்ளவும். அதில் கலவையை போடவும்.

  9. 9

    மேலே சிறிது சர்க்கரையை தூவவும்.ஆறினதும் கட் செய்யவும். வில்லைகளை தட்டில் வைத்து மேலே வால் நட், முந்திரி,பாதாம் வைத்து அலங்கரிக்கவும்.

  10. 10

    "பஞ்ச கல்யாண் பர்ஃபி" தயார்.மிகவும் வித்தியாசமானது. சுவையானது ஆரோக்கியமானது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes