பக்கா கோவில் புளியோதரை

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#vattaram7
சாதரணமாக, அரைத்த பொடியை கொதிக்கும் புளியில் போடுவோம்.ஆனால் கோவில் புளியோதரையில் புளிக்காய்ச்சலில் பொடியை போடக்கூடாது.சாதம் போட்டு கிளறியதும்தான் கடைசியில் போடவேண்டும். அதேபோல் கடாயில் நல்லெண்ணெய் காய்ந்ததும் வேர்க்கடலை(அ) முந்திரியை வறுத்ததும் வறுத்த பொடியை கலந்து சாதத்தில் போட்டு கிளறினால் கோவிலில் கொடுக்கும் புளியோதரை போல்," பக்கா கோவில் புளியோதரை"டேஸ்ட் கிடைக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
6பேர்
  1. 1டேபிள்ஸ்பூன்தனியா
  2. 15மிளகாய்
  3. 2டேபிள்ஸ்பூன்க.பருப்பு
  4. 11/2டேபிள்ஸ்பூன்உ.பருப்பு
  5. 1டேபிள்ஸ்பூன்க.எள்
  6. 1ஸ்பூன்வெந்தயம்
  7. 1ஸ்பூன்கடுகு
  8. 15முந்திரி
  9. 1/2கப்நல்லெண்ணெய்
  10. புளி எலுமிச்சையளவு
  11. கல் உப்பு ருசிக்கு
  12. 31/2கப்தண்ணீர்
  13. 1ஸ்பூன்ம.தூள்
  14. 1டீஸ்பூன்பெருங்காயம்
  15. 2கப்வெண் புழுங்கலரிசி

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    அரிசியை தேவையான தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.

  2. 2

    வெறும் கடாயில் மிளகாயை வறுத்துக்கொள்ளவும்.வறுத்ததை ஒரு கிண்ணத்தில் போடவும்.பிறகு தனியாவை வறுக்கவும்.

  3. 3

    அதையும் கிண்ணத்தில் போடவும்.க.பருப்பு,உ.பருப்பையும் வறுத்து கிண்ணத்தில் போடவும்.

  4. 4

    கருப்பு எள்ளையும் வறுத்து சேர்க்கவும்.மிளகை வறுத்துக்கொள்ளவும்.

  5. 5

    மிளகையும் சேர்க்கவும்.வெந்தயத்தையும் வறுத்து சேர்த்துக் கொள்ளவும்.

  6. 6

    வறுத்த அனைத்தையும் ஆறினதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.

  7. 7

    கடாயில் நல்லெண்ணெய் காய்ந்ததும் கடுகை போடவும்.வெடித்ததும், க.பருப்பு,உ.பருப்பு,மிளகாயை தாளிக்கவும்.ம.தூள் போடவும்.

  8. 8

    புளியை ஊறவைத்து வடிகட்டி ஊற்றவும்.அதில் பெருங்காயத்தூள்,உப்பு போட்டு நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.வேறொரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் முந்திரியை வறுத்து, அதில் வறுத்த பொடியை போட்டு 2நிமிடம் வறுக்கவும்.

  9. 9

    ஊறின அரிசியில் 1ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு உதிரியாக வடித்துக் கொள்ளவும்.பொடிபோட்டு வறுத்த முந்திரியில் வடித்த சாதம்,உப்பு போட்டு கிளறவும்.பிறகு கெட்டியான புளிக்காய்ச்சலை போட்டு கரண்டியின் பின்புறத்தால் கிளறவும்.

  10. 10

    கிளறின சாதத்தில் கடைசியாக திரும்பவும் 2டேபிள்ஸ்பூன் பொடியை போட்டு மெதுவாக கிளறவும்.

  11. 11

    மிகமிக அருமையான,*பக்கா கோவில் புளியோதரை,*தயார்.இந்த முறையில் புளியோதரையை செய்து பார்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes