காளான் கிரேவி (Mushroom Gravy)

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

காளான் கிரேவி (Mushroom Gravy)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
நான்கு பேர்
  1. 200 கிராம் காளான்
  2. 2 வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. ஒரு டீஸ்பூன் தனியா பொடி
  7. கால் டீஸ்பூன் மஞ்சள்பொடி
  8. 2 டேபிள்ஸ்பூன் சமையல் எண்ணெய்
  9. 2 கொத்து கொத்தமல்லி
  10. தேவையான அளவுஉப்பு
  11. மசாலா அரைக்க
  12. அரை டீஸ்பூன் மிளகு
  13. அரை டீஸ்பூன் சோம்பு
  14. 2 மராட்டி மொக்கு
  15. 1 அன்னாசிப்பூ
  16. 1 சிறிய துண்டு துண்டு மசாலா பட்டை
  17. 4 கிராம்பு
  18. 2 ஏலக்காய்
  19. 2 வரமிளகாய்
  20. ஒரு டீஸ்பூன் கசகசா
  21. 2 டீஸ்பூன் துருவிய தேங்காய்
  22. தாளிக்க
  23. கால் டீஸ்பூன் சோம்பு
  24. சிறியதுண்டு மசாலா பட்டை
  25. மூன்று கிராம்பு
  26. 2 ஆர்க்கு கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    மசாலா அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். காளானை சுத்தமாக அலசி எடுத்து இரண்டு இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியை சூடாக்கி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சேர்த்து வறுத்து இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி போல் வதக்கவும். பின்பு நறுக்கிய தக்காளியை சேர்த்து கரையும் வரை வதக்கவும்.

  3. 3

    பிறகு மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். இரண்டு நிமிடம் வதக்கிய பிறகு காளானை சேர்த்து நன்கு வதக்கி ஒரு கப் நீர் விட்டு 5 நிமிடம் வேக விடவும்.

  4. 4

    பிறகு அரைத்த மசாலாவை சேர்த்து 2 கப் நீர் விட்டு தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் கொதிக்க விட்டு நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes