பட்டாணி காளான் குழம்பு

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

பட்டாணி காளான் குழம்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30mins
2 பரிமாறுவது
  1. 1கப் பச்சை பட்டாணி
  2. 1பாக்கெட் காளான்
  3. 3பெரிய வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 3டீஸ்பூன் ஆயில்
  6. 1 டீஸ்பூன் சீரகம்
  7. தேவையான அளவுஉப்பு
  8. வறுத்து அரைக்க:
  9. 2டீஸ்பூன் ஆயில்
  10. 1/2கட்டு கொத்தமல்லி தழை
  11. 1கப் தேங்காய் துருவல்
  12. 4முழு முந்திரி,1துண்டு இஞ்சி, 4 பல் பூண்டு
  13. 1துண்டு பட்டை, 2 கிராம்பு
  14. 1டீஸ்பூன் கசகசா
  15. 1டீஸ்பூன் சோம்பு
  16. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  17. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  18. 2டீஸ்பூன் தனியாத் தூள்
  19. 1டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  20. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    1 பாக்கெட் காளான்,1 கப் பச்சை பட்டாணியை கழுவி எடுத்து வைக்கவும்.1/2 கட்டு கொத்தமல்லி தழையை கழுவி வைக்கவும்.

  2. 2

    மூன்று பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். இரண்டு தக்காளியை எடுத்து வைக்கவும். 4 பல் பூண்டு, 1 துண்டு இஞ்சி, 4 முழு முந்திரி, 2 கிராம்பு, 1துண்டு பட்டை, 1 டீஸ்பூன் சோம்பு, 1டீஸ்பூன் கசகசா எடுத்து வைக்கவும்.

  3. 3

    கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு கசகசா சோம்பு, பூண்டு, இஞ்சி பட்டை, கிராம்பு, முந்திரி ஆகியவற்றை வறுக்கவும். அதனுடன் கழுவி வைத்த கொத்தமல்லி தழை,1 கப் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வறுத்து விடவும்.

  4. 4

    வதக்கியதை ஆறவிட்டு, அதனுடன் 2 டீஸ்பூன் தனியா தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு நைசாக அரைத்து விடவும்.

  5. 5

    காளானை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் ஆயில் விட்டு,1 டீஸ்பூன் சீரகம் தாளித்து, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி, அதனுடன் நறுக்கிய தக்காளி சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி விடவும்.1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்க்கவும்.

  6. 6

    வெந்த பச்சைப் பட்டாணியில் தண்ணீரை வடித்து வைக்கவும். வெங்காயம் வதங்கிய வுடன், காளான் சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் அரைத்த மசாலா, உப்பு வெந்த பச்சை பட்டாணி சேர்த்து கலக்கி, குக்கரில் ஒரு விசில் வேகவிடவும்.

  7. 7

    குக்கரை திறந்து சிறிது நேரம் கொதிக்க விட்டு, அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான பட்டாணி காளான் குழம்பு#2 ரெடி. நான் சப்பாத்திக்கு இந்த காளான் குழம்பை சைட் டிஷ் ஆக செய்தேன். அருமையாக இருந்தது.😋😋 நறுக்கிய பெரிய வெங்காயம் 1, 1 தக்காளி சிறிது மிளகுத் தூள், உப்பு எலுமிச்சைச் சாறு சிறிது, கொத்தமல்லி தழை நறுக்கியது சிறிது சேர்த்து கலக்கி வைத்தேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
MY recipe has peas, mushrooms,. and cauliflower. Served it with chappathies

Similar Recipes