முட்டை கடலைமாவு ஆம்லெட்

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

#vahisfoodcorner
முட்டை கடலை மாவு ஆம்லெட் காலை உணவாகவும் அல்லது சாதத்திற்கு தொடு கறியாகவும் உபயோகிக்கலாம்.

முட்டை கடலைமாவு ஆம்லெட்

#vahisfoodcorner
முட்டை கடலை மாவு ஆம்லெட் காலை உணவாகவும் அல்லது சாதத்திற்கு தொடு கறியாகவும் உபயோகிக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
இரண்டு பேர்
  1. இரண்டு முட்டை
  2. 3 டேபிள்ஸ்பூன் கடலை மாவு
  3. ஒரு வெங்காயம்
  4. ஒருதக்காளி
  5. இரண்டு பச்சை மிளகாய்
  6. விரலளவு துண்டு இஞ்சி
  7. கால் டீஸ்பூன் மிளகாய் பொடி
  8. கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி
  9. இரண்டு கொத்து கொத்தமல்லி
  10. ஒரு டேபிள்ஸ்பூன் சமையல் எண்ணெய்
  11. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து அரை கப் நீர் விட்டு கலக்கவும். தேவைப்பட்டால் இன்னொரு கால் கப் நீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும். இந்த முட்டையை கடலை மாவு கலவையில் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.

  3. 3

    தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு கடலை மாவு முட்டை கலவையை தோசைகளாக ஊற்றி, திருப்பி போட்டு எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். சுவையான முட்டை கடலைமாவு ஆம்லெட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes