தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
நான்கு பேர்
  1. ஒன்று பழுத்த இனிப்பான மாம்பழம்
  2. ஒரு கப் அவல்
  3. ஒரு கப் சர்க்கரை
  4. 8 முந்திரி
  5. 4 ஏலக்காய்
  6. 4 டேபிள்ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    வாணலியில் நெய் விட்டு முந்திரியை சிவக்க வறுத்து எடுத்து எடுத்த பின்பு அவளை சேர்த்து நெய்யில் சிவக்க வறுக்கவும்

  2. 2

    அவல் ஆறிய பின்பு மிக்ஸியில் கொரகொரப்பாக ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். மாம்பழத்தை தோலை சீவி விட்டு துண்டுகளாக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு வாணலியில் ஒரு கப் நீர் விட்டு கொதிக்க ஆரம்பித்தவுடன் அவல் பொடியை சேர்த்து கிளறவும். அவள் வெந்தவுடன் சர்க்கரையை சேர்த்து கட்டிகளில்லாமல் நன்கு கிளறவும்.

  4. 4

    பின்பு மாம்பழ விழுதை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் கிளறவும். இடையிடையே நெய் விட்டு கிளறவும். பொடித்த ஏலக்காயை சேர்த்து கிளறி வறுத்து வைத்த முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes