எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30mins
2 பரிமாறுவது
  1. 200 கிராம் சிறிய உருளைக்கிழங்கு
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 2 முழு பூண்டு
  4. சிறிதளவுகறிவேப்பிலை கொத்தமல்லி தழை
  5. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. தேவையான அளவுஉப்பு
  8. 5 டீஸ்பூன் ஆயில்உருளைக்கிழங்கை பொரிக்க
  9. தாளிக்க:
  10. 2டீஸ்பூன் ஆயில்
  11. 1டீஸ்பூன் கடுகு
  12. 1வரமிளகாய் கிள்ளியது
  13. சிறிதளவுகறிவேப்பிலை
  14. சிறிதளவுபெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    200 கிராம் சிறிய உருளைக்கிழங்கை கழுவி குக்கரில் சேர்த்து தண்ணீர் சிறிது விட்டு 2 விசில் வேக வைத்து எடுத்து வைக்கலாம். ஆறியவுடன் தோல் நீக்கி, கடாயில் 5 டீஸ்பூன் ஆயில் விட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்து வைக்கவும்.

  2. 2

    பொரித்ததை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். அதே கடாயில் மேலும் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு, கடுகு 1 டீஸ்பூன்,1 வரமிளகாய் கிள்ளியது, சிறிதளவு பெருங்காயத் தூள், 2 முழு பூண்டு தட்டியது, சிறிது கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விடவும்.

  3. 3

    வெங்காயம் நன்கு வதங்கிய உடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து, பொரித்து வைத்த உருளைக் கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டி விடவும். அடுப்பை சிம்மில் வைத்து சிறுது நேரம் மூடி விடவும்.

  4. 4

    பிறகு நன்கு கிளறி விடவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

  5. 5

    சுவையான உருளைக்கிழங்கு காரகறி ரெடி😋😋 தயிர் சாதம், புளி சாதம், ரசம் சாதம், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட ஏற்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes