திரட்டுப்பால்

Gomathi Lakshmanan
Gomathi Lakshmanan @GomathiLakshmi

#keerskitchen திருநெல்வேலி ஸ்பெஷல் இந்த இனிப்பு. அல்வா மாதிரி அட்டகாசமா இருக்கும். நல்ல ஆரோக்கியமான பழமையான பண்ட வகையைச் சார்ந்தது. வீட்டிற்கு விருந்தினர் வந்தால் இந்த இனிப்பு செய்வோம்.
#KeersKitchen

திரட்டுப்பால்

#keerskitchen திருநெல்வேலி ஸ்பெஷல் இந்த இனிப்பு. அல்வா மாதிரி அட்டகாசமா இருக்கும். நல்ல ஆரோக்கியமான பழமையான பண்ட வகையைச் சார்ந்தது. வீட்டிற்கு விருந்தினர் வந்தால் இந்த இனிப்பு செய்வோம்.
#KeersKitchen

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 1சிறியதுதேங்காய் -
  2. 250gமண்டை வெல்லம் -
  3. -500mlபால்
  4. 40gசிறுபருப்பு -
  5. 150mlநெய் -

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    முதலில் குக்கர் அல்லது அடிப்பகுதி கனமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் சிறுபருப்பை எண்ணெய் இல்லாமல் வாசம் வரும் வரை வறுக்கவேண்டும்

  2. 2

    பின் சிறுபருப்பு ஆறிய உடன் அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்க வேண்டும்.பாலை குக்கரில் வைத்து காய்ச்ச வேண்டும்.

  3. 3

    மண்டை வெல்லத்தை புட்டு அரிப்பில் வைத்து சீவிக் கொள்ள வேண்டும். பின் பால் காய்ந்த உடன் மண்டை வெல்லம், அரைத்த கலவை இரண்டையும் பாலுடன் சேர்க்க வேண்டும்.

  4. 4

    கை விடாமல் நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.இடை இடையே நெய் சேர்க்க வேண்டும்.

  5. 5

    கையில் ஒட்டாத பதம் வந்தவுடன் இறக்கி பரிமாறவும். பாட்டி காலத்து பண்டம் திரட்டு பால் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gomathi Lakshmanan
Gomathi Lakshmanan @GomathiLakshmi
அன்று

Similar Recipes